IND vs ZIM Match Updates: கடந்த வாரம் சனிக்கிழமை இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியது. தொடர்ந்து நாடு இந்திய அணியை கொண்டாடி வரும் இந்த சூழலில், இந்திய இளம் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று விளையாட உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். சீனியர்களுக்கும் இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் சுப்மான் கில் இந்த இளம் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாட உள்ளன. இன்று தொடங்கும் இந்த தொடர் வரும் ஜூல 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றும், நாளையும் முதலிரண்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூலை 10, 12, 14 ஆகிய தேதிகளில் கடைசி மூன்று டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
IND vs ZIM: இன்று முதல் டி20 போட்டி
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹாராரே நகரில் உள்ள ஹாராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்த 5 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டிகள் நடைபெறும். இந்த தொடரை தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலிலும், சோனிலிவ் ஓடிடி தளத்திலும் நீங்கள் நேரலையில் காணலாம். சிக்கந்தர் ராஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காத நிலையில், இந்திய இளம் அணியுடன் மோத தற்போது காத்திருக்கிறது.
இந்த தொடரில் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், சாம்சன், தூபே ஆகியோரும் உள்ளனர். எனினும், கொண்டாட்டங்களுக்காக நாடு திரும்பியிருப்பதால் முதலிரண்டு போட்டிகளில் இவர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் டி20 உலகக் கோப்பையில் பேக் அப் வீரர்களாக இருந்த நால்வரும் இந்த அணியில் இடம்பிடித்திருக்கின்றனர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
ஏன் இது முக்கியமான தொடர்...?
அந்த வகையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை சுப்மான் கில் எப்படி வழிநடத்தப்போகிறார்; அடுத்த இரு ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி எப்படி தயாராகும்; ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், பும்ரா ஆகியோர் இந்திய டி20 அணிக்குள் வரும்போது யார் யார் இந்திய அணியில் தொடர்வார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த தொடர் முக்கியமானதாக அமைகிறது.
மேலும், இந்திய அணியின் ஓப்பனர்களாக யார் யார் இருக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. முதலிரண்டு போட்டிகளுக்கு கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ், சாய் சுதர்சன் என நான்கு ஓப்பனர்கள் இருக்கின்றனர். இதில் தற்போது சாய் சுதர்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பில்லை என்றாலும் ஜெய்ஸ்வால் மூன்றாவது போட்டிக்கு வரும்போது யார் வெளிய அமரவைக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
சரவெடி ஓப்பனர் இவர் தான்...
இந்நிலையில், தன்னுடன் ஓப்பனிங்கில் இறங்கப்போவது யார் என்பது சுப்மான் கில், கேப்டனாக அவரது முதல் பேட்டியில் தெரிவித்துள்ளார். அபிஷேக் சர்மாவுடன் தான் ஓப்பனிங் இறங்குவதாகவும், மூன்றாவது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் எனவும் தெரிவித்தார். எனவே இந்தியா வலது - இடது என அதிரடி காம்போவை பரீட்சித்து பார்க்க முடிவெடுத்துள்ளது. இதில் அபிஷேக் அதிரடியாக விளையாடும்பட்சத்தில் ஜெய்ஸ்வாலுக்கும், சாய் சுதர்சனுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
மேலும் படிக்க | இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஜிம்பாப்வே போட்டியில் இதுதான் பிளான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ