கிரிக்கெட் உலக கோப்பை 2019 தொடரை ட்விட்டரில் கொண்டாடும் விதமாக தொரில் பங்கேற்றுள்ள அணி மற்றும் அணி தலைவர்களுக்கு சிறப்பு எமோஜிகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர்!
2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று முதல் துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட பத்து அணிகள் பங்கேற்கிறது.
இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983-ஆம் ஆண்டும், மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011-ஆம் ஆண்டும் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா கிரிக்கெட் அணி வரும் ஜூன் 5-ஆம் தேதி உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை தொடங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்க்கொள்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 16 ஆம் நாள் நடைபெறவுள்ளது.
(it also works for the #CWC19 captains!!)#GulbadinNaib#AaronFinch#MashrafeMortaza#EoinMorgan#ViratKohli#KaneWilliamson#SarfarazAhmed#FafDuPlessis#DimuthKarunaratne#JasonHolder pic.twitter.com/CEr5Mc1Coy
— Cricket World Cup (@cricketworldcup) May 29, 2019
இது உலக கோப்பை தொடர் ரவுண்ட் சுற்று ராபின் வடிவமைப்பில் விளையாடப்படுகிறது. இதில் அனைத்து அணிகளும் ஒருவரோடு ஒருவர் மோதுவார்கள். இதில் வெற்றி பெரும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஜூலை 14 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.
இந்நிலையில் தற்போது கிரிக்கெட் உலக கோப்பை 2019 தொடரை ட்விட்டரில் கொண்டாடும் விதமாக தொரில் பங்கேற்றுள்ள அணி மற்றும் அணி தலைவர்களுக்கு சிறப்பு எமோஜிகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு #TeamIndia என்னும் ஹாஸ்டேகினையும், #ViratKohli என்னும் ஹாஸ்டேகில் கோலியின் எமோஜியினையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.