வீடியோ: திருடனிடம் இருந்து பெண்னை காப்பாற்றிய நாய்!

நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்பதில் எந்த ஐயமும் இல்லை, இதை நிரூபிக்குப் வகையினில் இங்கிலாந்து தெருவில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

Last Updated : Nov 26, 2017, 03:29 PM IST
வீடியோ: திருடனிடம் இருந்து பெண்னை காப்பாற்றிய நாய்! title=

நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்பதில் எந்த ஐயமும் இல்லை, இதை நிரூபிக்குப் வகையினில் இங்கிலாந்து தெருவில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

இங்கிலாந்து தெரு ஒன்றில் பெண்மனி ஒருவர் நடந்து கொண்டிருக்கும்போது, அவரது கைப்பையினை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றார். இந்த காட்சிகளை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த நாய் ஒன்று அவரை தாக்கி அப்பெண்மனியை காப்பாற்றி நகரின் நாயகனாக மாறியுள்ளது.

இந்த நிகழ்வின் சி.சி.டி.வி காட்சிகள் அருகில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணைய பிரியர்களால் பரவலாக பகிரப் பட்டு வருகின்றது.

திடிரென நிகழ்ந்த இச்சம்பவத்தில் யாரும் எதிர்பாரா விதமாக நாய் சட்டென்று அப்பெண்னை காப்பாற்றியது வைரலாக பரவி வருகின்றது.

இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு!

Trending News