நடிகர் சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் NGK என்னும் நந்த கோபாலன் குமரன் திரைப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்புகள் துவங்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க பெரும் எதிர்பார்புடன் உருவாகி வந்தது. ஆரம்பத்தில் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடவுள்ளதா படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால் படவேலைகளுக்கு இடையில் இயக்குநர் செல்வராகவன் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் NGK., தீபாவளி அன்று வெளியிடப்படாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் சூர்யா கவனம் செலுத்தத் தொடங்கினார்.
எனினும் NGK திரைப்படத்தினை எதிர்ப்பார்த்துள்ள செல்வராகவன் ரசிகர்கள் இந்தப் படம் குறித்த தகவல்களை வேண்டி இணையத்தில் படையெடுத்தனர். தொடர்ந்து படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரிடன் ரசிகர்கள் படத்தின் வெளியீடு குறித்து கேட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு துவங்கியுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே விரைவில் படத்தின் வெளியீட்டினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
My humble request. We work hard and we work in silence. Updates will come at the right time. Not every third day or every week. And i strongly believe that if you give us strength we will work much more harder towards our goal. #NGK
— selvaraghavan (@selvaraghavan) November 27, 2018
முன்னதாக இப்படத்தின் தாமதம் குறித்து மனம் திறந்த இயக்கநர் செல்வராகவன் தெரிவிக்கையில்... "எனது தாழ்மையான வேண்டுகோள்; படத்தின் வெளியீட்டிற்கா நாங்கள் கடுமையாக உழைத்து வருகின்றோம். விரைவில் வெளியாகும், அதேப்போல் படத்தின் அப்டேட்ஸ் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அதேவேலையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை (அ) வாரம் ஒருமுறை படம் குறித்த தகவல்கள் வெளியிடுவதென்பது இயலாத காரியம் என்பதை ரசிகர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.