தமிழ் சீரியல் நடிகை வைஷாலி தணிகா - சத்யா தேவ் திருமண எமோஷ்னல் வீடியோ

எளிமையான முறையில் இருவீட்டார் முன்னிலையில் வைஷாலி தனிகா மற்றும் சத்யதேவ் திருமணம் கோலாகலமாக பிரமாண்டமாக நடந்தேறியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 05:00 PM IST
  • எளிமையான முறையில் இருவீட்டார் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.
  • எமோஷ்னலாகி கண் கலங்கும் படங்களும் வீடியோவும் வைரல்.
  • கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
தமிழ் சீரியல் நடிகை வைஷாலி தணிகா - சத்யா தேவ் திருமண எமோஷ்னல் வீடியோ title=

தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷாலி தனிகா தனது காதலரான சத்யா தேவ்வை திங்கள்கிழமை சென்னையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். சன் டிவி நிகழ்ச்சியான மகராசி உட்பட பல தமிழ் தொடர்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அதில் பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷாலி தனிகா மற்றும் சத்யதேவ் இருவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். 

இந்நிலையில், எளிமையான முறையில் இருவீட்டார் முன்னிலையில் வைஷாலி தனிகா மற்றும் சத்யதேவ் திருமணம் கோலாகலமாக பிரமாண்டமாக நடந்தேறியது.

திருமணம் எளிமையாக நடைபெற்றாலும், அங்கு இருந்த கொண்டாட்டங்கள் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் எமோஷ்னலாகி கண் கலங்கும்  படங்களும் வீடியோக்களும் இப்போது வெளியாகி பார்ப்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

இன்ஸ்டாவில் தனது திருமண நிகழ்வுகள் தொடர்பான ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து இருக்கிறார்.

ALSO READ |  Viral Photo: சைடு போஸில் ரசிகர்களை கிறங்கவைத்த ஷிவானி

வைஷாலி தனிகா கடந்த மாதம் செப்டம்பர் 27 அன்று தனது பிறந்தநாளில் தனது திருமண அறிவிப்பின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். பிறந்தநாள் அன்று, ​​அவர் விரைவில் திருமண வாழ்க்கையில் நுழைவதால், திருமதி என்ற பட்டத்தை பெறுவதற்கு முன், இதுவே தனது கடைசி பிறந்த நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 

வைஷாலியும் சத்யதேவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 

வைஷாலி தணிகா-சத்யா தேவ் திருமண வீடியோ:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mani (@mani_stylist_)

 

வைஷாலி தணிகா தற்போது பிரபல விஜய் டிவி சீரியலான நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து வருகிறார். ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை, சன் டிவி சீரியலான மகராசி போன்ற சீரியல்களில் நடித்து இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக, அவர் மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி (விஜய் டிவி) மற்றும் லட்சுமி வந்தாச்சு (ஜீ தமிழ்) போன்ற வெற்றித் தொடர்களில் நடித்துள்ளார். 

ALSO READ |  பிக்பாஸ் நாமினேஷனில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்: புதிய ப்ரோமோ

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி, கசகுதய்யா, கடுகு, திரி, எங்க அம்மா ராணி, ராஜா மந்திரி, பைரவா, ரெமோ, சர்கார், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News