இளம்பெண்ணிடம் கரடி செய்த செயல்... நொடிக்கு நொடி பதறவைக்கும் வீடியோ!

கரடி ஒன்று மலைப்பாதைகளில் சுற்றுலா சென்ற மூன்று இளம்பெண்கள் அருகில் சென்று அவர்களை முகர்ந்து பார்த்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 26, 2023, 04:55 PM IST
  • இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ குறித்த மற்ற விவரங்கள் தெரியவில்லை.
இளம்பெண்ணிடம் கரடி செய்த செயல்... நொடிக்கு நொடி பதறவைக்கும் வீடியோ! title=

Viral Video: சாலையில் நீங்கள் நின்றுகொண்டிருக்கும்போது, திடீரென ஒரு கருப்பு கரடி உங்களுக்கு அருகில் நிற்பதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. அதை யோசிக்கும் போதே உங்களை ஒரு நொடி பயம் தொற்றிக்கொள்கிறது அல்லவா.  

ஆனால், மலையேறும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, அவர்களை கரடி ஒன்று நெருங்கிய வீடியோ சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பயங்கரமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில், இந்தியாவில் எங்கோ மலையேறும் சுற்றுலா மேற்கொண்ட மூன்று பெண்கள் கருப்பு கரடியை எதிர்கொண்டனர். கரடி அங்கிருந்த ஒரு பெண்ணை மோப்பம் பிடிக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில், மற்ற இரண்டு பெண்களும் அசையாமல் இருந்தனர்.

மேலும் படிக்க | கோழியிடம் தேவையில்லாமல் வம்பிழுத்து உதை வாங்கிய எலி; வைரல் வீடியோ

விலங்குடன் விரைவாக செல்ஃபி எடுப்பதற்காக தனது தொலைபேசியை உயர்த்திய போது, கரடி அந்த பெண்ணின் தலையை முகர்ந்து பார்க்க முயன்றது. இருப்பினும், கடைசி வரை அமைதியாக நின்று அந்த கரடியிடம் இருந்து தப்பித்தனர்.

வைரல் வீடியோ:

வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த பெண்களில் பொறுமையை பல ட்விட்டர் பயனர்கள் பாராட்டினர். கரடி அந்தப் பெண்ணை தொடர்ந்து பரிசோதித்து, அந்த பெண்ணின் தொடையை மீண்டும் மீண்டும் கடித்தது. அப்போது வீடியோ எடுக்கும் ஒருவர், அதை தடுக்குமாறு தூரத்தில் குரல் எழுப்பினார். அதிர்ஷ்டவசமாக, கரடி இறுதியில் ஆர்வத்தை இழந்து மூவரையும் விட்டு வெளியேறியது. இந்த வைரல் வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டது. 

அதில்,"கரடி தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி... அமைதியாக நின்று, கடைசிவரை அமைதியாக இருங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்களின் உயரத்திற்கு அந்த கரடி எழுந்து நின்று காட்சி பார்ப்போரை மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தநர். பலரும் இதனை பங்குச்சந்தையின் வீழ்ச்சியை குறிக்கும் கரடியை குறிப்பிட்டு, தங்களது கருத்துகளை வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர். கரடி தாக்குதலில் இருந்து தப்பிய பெண்களின் வைரல் வீடியோ, பதிவில் 66 லட்சம் வியூஸ், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸை பெற்றது. 

மேலும் படிக்க | Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News