கோழியிடம் தேவையில்லாமல் வம்பிழுத்து உதை வாங்கிய எலி; வைரல் வீடியோ

அமைதியாக சென்ற கோழியிடம் வீம்புக்கு வம்பிழுத்து வாங்கிக்கட்டிக் கொண்ட எலியின் காமெடியான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காண்போரை இந்த வீடியோ நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2023, 04:17 PM IST
கோழியிடம் தேவையில்லாமல் வம்பிழுத்து உதை வாங்கிய எலி; வைரல் வீடியோ title=

குரங்கு சேட்டைக்கு இணையாது எலி சேட்டை. இதனை பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால் எலி மனிதர்களைப் பார்த்தாலே பல நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி ஒளிந்து கொள்ளும். ஆனால் அப்படியான எலி ஒன்று கோழியிடம் சேட்டை செய்து உதை வாங்கிய வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் கோழி அமைதியாக தான் முதலில் சென்றது. ஆனால் இந்த குசும்பு புடிச்ச எலி, அந்த கோழியிடம் சென்று வேண்டும் என்றே வம்பு செய்ய ஆரம்பிக்க, அதற்கு கோபம் வந்துவிடுகிறது. அப்புறம் என்ன சும்மா விடுமா கோழி? எலியை துரத்தி துரத்தி கொத்த தொடங்குகிறது. தேவையில்லாமல் மாட்டிக் கொண்டோமே என நினைத்த எலி எப்படியாவது தப்பிக்க முயல்கிறது, இருப்பினும் முடியவில்லை.

மேலும் படிக்க | Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!

பெரிய ஆளுகிட்ட மோதிட்டோமோ? என எண்ணுகிற வகையில் கோழி எலியை கொத்தி எடுத்து விடுகிறது. கடி வாங்கிய கோழி கொத்த வில்லை. அந்த கோழிக்கு ஆதரவாக இன்னொரு கோழி வந்தது தான் அந்த சீனில் ஹைலைட். இந்த வீடியோ வைல்டு லென்ஸ் எகோ பவுண்டேஷன் எனும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 47 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவில் பொந்து ஒன்றில் இருந்து எலி  வெளியே வருகிறது. அப்போது சேவல் ஒன்று அங்கு நின்று கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்த எலி, அதனருகே செல்கிறது. எலி வருவதை பார்த்தாலும், கோழி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது. 

அப்போது எலி அங்கிருந்து ஓடிச் சென்றிருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் கோழியின் அருகிலேயே சென்று வம்புக்கு இழுக்கிறது. இரண்டு மூன்று கடிகளை வாங்கிய சேவல், பொறுத்தது போதும்டா என கொதித்தெழுந்து எலியை பதிலுக்கு கொத்த தொடங்குகிறது. அவ்வளவு தான்... உடனே எலி ஒரே கடியில் கீழே விழுந்து வலியால் துடிதுடிப்பது போல் நடித்து மயக்கமடைவதுபோல் நடிக்கிறது. உடனே கோழி, என்னடா இது? என எலியின் இந்த சேட்டையை நின்று வேடிக்கை பார்க்கிறது. கியூட்டான இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | தண்ணி அடிக்கும் நாகப்பாம்பு..வியக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News