காதலில் சொதப்புவது குறித்து ஒவ்வொருவரிடமும் ஆயிரம் கதைகள் இருக்கும். சிறிய தவறு ஒரு காதலை நொடியில் முடிவுக்கு கொண்டு வந்துவிடும். ஏனென்ன்றால், அந்த சிறிய தவறை இருவரும் ஏற்றுக் கொள்ள இயலாத மனப்பக்குவம் அல்லது திரும்ப திரும்ப செய்யும் சில தவறுகள் காதலை முறிவுக்கு கொண்டுவரும் விஷயங்களாக இருக்கும். ஆனால், அதனை சமாதானம் மூலம் மீண்டும் மலர வைக்கலாம். அதற்கு இருவரும் எடுக்கும் முயற்சிகளை பொறுத்து தான், முன்னாள் காதல் மலர வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் எந்த இடத்தில் தேடினால் கிடைக்குமோ அந்த இடத்தில் தேடினால் கிடைக்கும், முயற்சித்தால் பலன கிடைக்கும். அதற்கு இங்கே இருக்கும் சில டிப்ஸ்களை தாராளமாக முயற்சிக்கலாம்.
மேலும் படிக்க | ரயில் ரிசர்வேஷன் சார்ட் ரெடி ஆனபிறகும் பணம் ரீஃபண்ட் கிடைக்குமா?
* நீங்கள் செய்த தவறை ஒப்புக் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுங்கள். ஈகோ இல்லாமல் சரண்டைவது காதலை மீண்டும் மலர வைக்க அருமையான வாய்ப்பு
* தவறுக்கு மன்னிப்பை கேட்டுவிடலாம். அதுவும் உணர்வுபூர்வமான உங்கள் மன்னிப்பை கேட்பது அன்பான நினைவுகளை மீண்டும் வரவழைக்கும்.
* சமாதானத்தின்போது கேட்கும் கேள்விகளுக்கு உண்மையாக பதிலை கொடுக்க வேண்டும். ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நம்பிக்கையை கொடுக்கும்
* உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
* உங்கள் முயற்சிக்கு உடனடியாக பதில் கிடைக்கும், சமாதானமாகிவிடுவார்கள் என நினைக்கக்கூடாது. பொறுமை அவசியம்.
* பாசிட்டிவான அணுகுமுறை கிடைத்தவுடன் உடனடியாக உங்கள் பக்க நியாயத்தை கொட்டிவிடக்கூடாது. சிறிது காலம் கழித்து பிரச்சனைகான காரணம் குறித்து உங்கள் தரப்பை தெரிவிக்கலாம் அல்லது அதனை மீண்டும் ஏன் பேச வேண்டும் என விட்டுவிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ