இது உலக மகா நடிப்புடா சாமி.. தொட்டதும் மயங்கி விழுந்த பாம்பு: வீடியோ வைரல்

Viral Video: பாம்பின் மரண நாடகத்தின் இந்த வீடியோ யூடியூப்பில் வைரலாகி வருகிறது. யூடியூப் வீடியோவில் பாம்பு இதைச் செய்வதைப் பார்த்தால், நீங்கள் திகைத்துப் போவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 25, 2023, 08:45 AM IST
  • பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.
  • விஷப்பாம்பு வீடியோவைப் பார்த்து சிரிக்க வைக்கும்.
இது உலக மகா நடிப்புடா சாமி.. தொட்டதும் மயங்கி விழுந்த பாம்பு: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | அடிச்சிக்காதீங்கப்பா.. நிறுத்துங்க: நெட்டிசன்களை கடுப்பேற்றிய நாய் குரங்கு சண்டை, வைரல் வீடியோ

அந்தவகையில் சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு விஷப்பாம்பு வீடியோவைப் பார்த்து சிரிக்க வைக்கும் வகையில் செயல்படுகிறது. தகவலின்படி, இந்த வீடியோ டெக்சாஸைச் சேர்ந்தது, அங்கு இந்த இண்டிகோ பாம்பு இறந்து போவது போல் நடிப்பது, வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷப் பாம்பு எதிரில் இருப்பவரை தாக்குவதற்குப் பதிலாக, அது தனது மரண நாடகத்தை ஆடுகிறது. இந்த வீடியோ யூடியூப்பில் வைரலாகி வருகிறது. யூடியூப் வீடியோவில் பாம்பு இதைச் செய்வதைப் பார்த்தால், நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ 2017 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் விஷ பாம்பு ஒன்று இறந்து போவது போல் நடிப்பதை தெளிவாக காணலாம். பாம்புகளின் இத்தகைய செயல் நாம் இதுவரை எங்கும் கண்டிருக்க மாட்டோம் என்றே கூறலாம்.

விஷப் பாம்பின் நாடக வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வைரலான வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

 

மேலும் படிக்க | பாம்பை மென்று சாப்பிட்ட நபர்..அதுவும் உயிருடன்..திக் திக் சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News