OMG! பாக்கவே பயமா இருக்கு.. பாம்பை கட்டமேனிக்கு பதம் பார்த்த ஆமை: வீடியோ வைரல்

Turtle Viral Video: ஆமை ஒன்றின் வைரலான வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீரில் மறைந்திருக்கும் ஆமையின் செயலைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 9, 2023, 01:00 PM IST
  • ஆமை ஒன்று மறைந்திருப்பது வீடியோவில் காணலாம்.
  • இன்றைய வைரல் வீடியோ.
OMG! பாக்கவே பயமா இருக்கு.. பாம்பை கட்டமேனிக்கு பதம் பார்த்த ஆமை: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | கால்பந்து வைத்து கன்னாபின்னானு மாயம் செய்யும் இளைஞன்: சத்தியமா நம்ப முடியல... வைரல் வீடியோ

வைரலாகி வரும் வீடியோவில், ஆமை ஒன்று பாம்பை உண்பது தெரிகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ஆமை சைவப் பிராணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது எப்படி அசைவம் ஆனது? என்று கேள்வி எழுப்பி வருகின்றது.

வீடியோவில் என்ன இருக்கிறது?
ஓடும் நீரில் பாறைக்கு அடியில் ஆமை ஒன்று மறைந்திருப்பது வைரலான வீடியோவில் உள்ளது. கொஞ்ச தூரத்தில் எங்கிருந்தோ ஒரு பாம்பு பாய்ந்து வருகிறது. அப்போது ஆமை பாம்பைப் பார்க்கிறது. இதற்குப் பிறகு, ஆமை திடீரென்று பாம்பின் மீது பாய்ந்து சிறிது நேரத்தில் அதை கொண்டறி தின்றுவிடுகிறது. 

பாம்பை ஆமை சாப்பிடும் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UNILAD (@unilad)

ஆமையின் இந்த செயலின் வீடியோ @unilad என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில் "ஆமை பாம்புகளையும் சாப்பிடும் என்பது தெரியாது" என்று பயனர் எழுதியுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பயனர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | எங்கடா ரோட்டைக் காணோம்: இது ஹிமாச்சலப்பிரதேச விநோதம் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News