பஸ்ஸில் சீட்டுக்கு சண்டை போடும் முதியவர்கள்: நொடிகளில் வைரலான கியூட் வீடியோ

Funny Viral Video: சீட்டு பிடிக்க நடக்கும் சண்டை! வேற லெவலில் சண்டையிடும் முதியவர்கள்!! இந்த வீடியோவை பகிர்ந்த மும்பை காவல்துறை ஒரு முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2022, 12:06 PM IST
  • மும்பை காவல் துறை சமீபத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
  • சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அதிக அளவில் பரப்ப மும்பை காவல்துறை இந்த வீடியோவை பயன்படுத்திக்கொண்டது.
  • இந்த விடியோவுக்கு 1.65 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் 26,000 லைக்குகளும் கிடைத்துள்ளன.
பஸ்ஸில் சீட்டுக்கு சண்டை போடும் முதியவர்கள்: நொடிகளில் வைரலான கியூட் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பல வித தகவல்கள், உதவிகளை பெறவும், பொழுதுபோக்குக்காகவும் பல வகைகளில் இணையம் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பல வித்தியாசமான விஷயங்கள் சில நொடிகளில் வைரல் ஆகி விடுகின்றன. இவற்றை பார்த்து மக்கள் தங்களை மறந்து சிரிப்பதுண்டு.

இந்தியாவில் காவல் துறை உட்பட பல துறைகள் இளைய தலைமுறையை சென்றடையவும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், மீம்களையும் பாப் கல்சசர் குறிப்புகளையும் பயன்படுத்துகின்றன. மும்பை காவல்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. மும்பை காவல் துறை சமீபத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அதிக அளவில் பரப்ப மும்பை காவல்துறை இந்த வீடியோவை பயன்படுத்திக்கொண்டது. இந்த வீடியோவை பகிர்ந்த காவல்துறை அதில், “டூ வீலரில் மூன்றாவது நபருக்கு இடமில்லை! #Tripling #roadsafety’ என எழுதியுள்ளது. இந்த விடியோவுக்கு 1.65 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் 26,000 லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | சாலையின் நடுவே குட்டியை ஈன்ற யானை - அமைதியாக 1 மணி நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகளின் நெகிழ்ச்சி செயல் 

இந்த வீடியோவில் ஒரு பேருந்தின் இருக்கையில் இரண்டு முதியவர்கள் அமர்ந்திருப்பதையும் அவர்கள் இடத்திற்காக சண்டை இடுவதையும் காண முடிகின்றது. ‘இடம் இருக்கிறது’ என்று ஒருவரும் ‘இடம் இல்லை’ என ஒருவரும் இந்தியில் கூறி சண்டியிடுகிறார்கள். இடத்திற்காக சண்டையிடும் இருவரும் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை கோபமாக கூறி சண்டையிடுகிறார்கள். 

இந்த வீடியோவை பயன்படுத்தி, டூ வீலரில், இரண்டு பேருக்கு மேல் செல்பவர்களுக்கு பாடம் புகட்ட மும்பை காவல்துறை முயற்சி செய்துள்ளது. பேருந்துக்குள் பாதுகாப்பாக இருக்கும் இருவர் அமரும் இருக்கையிலேயே அமர இப்படி ஒரு சண்டை நடக்கும்போது, இருவர் மட்டுமே அமர இடம் இருக்கும் டூ வீலர்களில் அதிக நபர்கள் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதை விளக்க மும்பை காவல்துறை வித்தியாசமான முறையில் முயற்சி செய்துள்ளது. 

மும்பை காவல்துறையின் இந்த வித்தியாசமான வீடியோ முயற்சி இணையவாசிகளை கவர்ந்துள்ளது. இதை ரசித்து பார்க்கும் நெட்டிசன்கள் இதற்கு பல வித கமெண்டுகளையும் சிரிப்பு எமோஜிகளையும் அள்ளி வீசி வருகின்றனர். 

தாத்தாக்கள் சண்டையிடும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

மேலும் படிக்க | Love You Maa: அம்மாவுக்கு பிறந்த நாள்! மகன் செய்த காரியத்தை பாருங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News