கதாநாயகியை மையப்படுத்திய திரில்லர் படத்தில் நடிகை வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி தற்போது பல படத்தில் நடித்து வருகிறார். போடா போடி படம் மூலம் தமிழ் திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. 

Last Updated : Apr 12, 2018, 01:27 PM IST
கதாநாயகியை மையப்படுத்திய திரில்லர் படத்தில் நடிகை வரலட்சுமி! title=

நடிகை வரலட்சுமி தற்போது பல படத்தில் நடித்து வருகிறார். போடா போடி படம் மூலம் தமிழ் திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. 

மேலும் இவர் ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்..

இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கத்தில் ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் வரலட்சுமி. 

இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்க இருக்கிறார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளராக நடிக்கிறார்.

Trending News