நாயை அலறவிட்ட இரட்டைக் கோழிகள்; வைரல் வீடியோ

நாயை அலறவிட்ட கோழிகளின் வீடியோ இணையவாசிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2022, 04:21 PM IST
நாயை அலறவிட்ட இரட்டைக் கோழிகள்; வைரல் வீடியோ  title=

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியாக நாய் இருந்தாலும், அவை வீட்டில் இருக்கும் மற்ற பூனை மற்றும் கோழிகளுடன் வம்புச் சண்டைக்கு போவதை பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் நாய் ஓரிடத்தில் அமைதியாக இருக்காது. அங்கும் இங்கும் ஓடிச் சென்று அலைந்து திரியும் நாய்க்கு, வம்புச் சண்டை இழுப்பதுவும் ஒரு வாடிக்கையான விஷயம். அதனால் சண்டையிடாமல் அமைதியாக இருக்கவே முடியாது. கிராம புறங்களில் வளர்க்கப்படும் நாய்கள், அடிக்கடி வீட்டில் வளரும் மற்றவைகளுடன் சண்டை போடுவதை பார்த்திருக்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: தன் தும்பிக்கையால் முதன் முதலாக தண்ணீர் குடிக்கும் குட்டி யானை!

குறிப்பாக நாய்க்கும் பூனைக்கும் எட்டாம் பொருத்தம் தான். பூனையை பார்த்துவிட்டாலே கோபத்தின் உச்சத்துக்கு சென்றுவிடும் நாய். இரண்டும் சீறிக் கொள்ளும். இதேபோல், கோழிகளுடம் மல்லுக்கட்டும் நாய், அவற்றை துரத்தும். கொஞ்சம் அசந்தால் நாய், கோழியை அடித்து சாப்பிடவும் செய்யவும். இப்படி இருக்கையில், கோழி இரண்டு நாய் ஒன்றை அலறவிட்ட சம்பவம் வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு தொட்டிக்குள் உட்கார்ந்திருக்கும் இரண்டு கோழிகளுக்கு அருகாமையில் செல்கிறது நாய். அப்போது அவற்றை முகர்ந்து பார்க்கிறது. 

நாய் வந்திருப்பதை அறிந்து கொண்ட அந்த கோழிகள், உடனே கோபத்துடன் கொக்கரித்து சீண்டலை வெளிப்படுத்த நாய் அலறியடித்து ஓடுகிறது. இத்துடன் மட்டும் இருக்கவில்லை. மீண்டும் தொட்டிக்குள் இருந்து இறங்கும் கோழிகள், நாய் படுத்திருக்கும் பகுதிக்கு சென்று முதுகில் கொத்துகின்றன. அமைதியாக இருக்கும் நாய் ஒன்றை வம்புச் சண்டைக்கு இழுக்கும் கோழிகளைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்துள்ளனர்.இந்த வீடியோவும் இணையத்தில் வரைலாகியிருக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.   

மேலும் படிக்க | என்னடா லுக்கு? பறவையை கண்டு பயந்தோடிய பூனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News