பீகார் கதிஹார்: கடந்த இரண்டு நாட்களாக பீகாரில் சில விசித்திரமான சம்வங்கள் நடந்துள்ளது. ககாரியாவில் ஒரு நபரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ .5.5 லட்சம் செலுத்தப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இதே போன்ற மற்றொரு சம்பவம் வெளிவந்துள்ளது. இது அனைவரையும் திகைக்க வைக்கும் சம்பவமாக உள்ளது. அதாவது பீகாரின் கதிஹாரில் இரண்டு குழந்தைகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு பெரும் தொகை வந்துள்ளது. இவ்வளவு பணமா என அந்த கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லைவ்ஹிந்துஸ்தானின் அறிக்கையின்படி, குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகியோரின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை ரூ .900 கோடிக்கு மேல். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவர்கள் இரண்டு பேரும் உள்ளூர் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) செயலாக்க மையத்திற்கு (CPC) சென்று தகவலை தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தான் இந்த பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டத் தொகை பள்ளி சீருடைகளுக்காக மாநில அரசு செலுத்திய தொகை எனத் தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் இருவரும் கத்திஹார் மாவட்டம் பாகுரா பஞ்சாயத்திற்கு உட்பட்ட பஸ்தியா கிராமத்தில் வசிப்பவர்கள். மாணவர் குருசந்திர விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் ரூ.60 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அசித் குமாரின் வங்கிக் கணக்கில் 900 கோடிக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வங்கிக் கணக்குகளும் வட பீகார் கிராமின் வங்கியின் (Uttar Bihar Gramin Bank) பெலகஞ்ச் கிளையை சேர்ந்ததாகும்.
ALSO READ | ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக 2லட்சம் ரூபாயை இழந்த நபர்
சிறுவர்கள் மற்றும் கிராமவாசிகள் மட்டுமல்ல, இந்த விசித்திரமான சம்பவத்தை கேட்டு வங்கி அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதற்கிடையில், வங்கி மேலாளர் மனோஜ் குப்தா, இரு குழந்தைகளின் வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் பரிவரத்தனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
சமீபத்தில், பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஒரு நபர் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ .5.5 லட்சம் செலுத்தப்பட்டது. ஆனால் இந்த பணம் "பிரதமர் நரேந்திர மோடி அனுப்பினார்" என்று கூறி அந்தத் தொகையைத் திருப்பித் தர மறுத்துவிட்டார். பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸுக்கு ககாரியாவில் உள்ள கிராமின் வங்கி தவறுதலாக பணத்தை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. வங்கி அதன் தவறை உணர்ந்த பிறகு, அதிகாரிகள் ரஞ்சித் தாஸுக்கு பல நோட்டீஸ்களை அனுப்பி, தொகையை திருப்பித் தருமாறு கூறினர். எனினும், அவர் பணத்தை செலவழித்ததாக கூறி பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார். பின்னர் அந்த நபர் பணத்தை திருப்பி கொடுக்காததால் கைது செய்யப்பட்டார்.
ALSO READ | Money Saving Tips: உங்கள் பணத்தை சேமிக்க ஐந்து எளிய வழிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR