Watch: நேரலையின் போது விழுந்த தொகுப்பாளரின் பல் செட்... அதிர்ந்த மக்கள்..!

பிரபல ஊடக தொலைக்காட்சி நேரலையில் செய்தி வாசிக்கும் போது தொகுப்பாளரின் பால் வெளியில் வந்து விழுந்ததால் பரபரப்பு...!

Last Updated : Jul 19, 2020, 08:45 AM IST
Watch: நேரலையின் போது விழுந்த தொகுப்பாளரின் பல் செட்... அதிர்ந்த மக்கள்..! title=

பிரபல ஊடக தொலைக்காட்சி நேரலையில் செய்தி வாசிக்கும் போது தொகுப்பாளரின் பால் வெளியில் வந்து விழுந்ததால் பரபரப்பு...!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. 

அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். ட்விட்டர் ஒரு அழகான இடம், நீங்கள் மீண்டும் மீண்டும் செல்லக்கூடிய விஷயங்களை மீண்டும் மீண்டும் காணலாம். இந்நிலையில், தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் செய்திவாசிப்பாளர் தன் பல் விழுந்த நிலையில் அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக டிவி நிருபர்கள் மற்றும் செய்தி அறிவிப்பாளர்கள், நேரடி ஒளிபரப்பின் போது வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்ளவதுண்டு. ஆனால், நடக்கும் அனைத்தையும் அவர்கள் நிர்வகிப்பது மிகவும் கடினமான செயல். உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மரிச்சா படல்கோ (Marichka Padalko). இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரது பல் உடைந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் திகைப்படைந்திருப்பார்கள் அல்லது அல்லது சிரித்திருப்பார்கள். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

@tsnua

A post shared by Марічка Падалко (@marichkapadalko) on

ஆனால், படல்கோ சிறிதும் பதற்றமடையாமல், கிழே விழுந்த பல்லை புத்திசாலிதனமாக கைகளால் பிடித்ததுடன், தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்தார். அந்த நேரத்தில் எந்த நிகழ்வும் நடக்காதது போல் நடந்து கொண்ட செயல் டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News