Viral Video: பார்பருக்கு பதில் மனைவியிடம் தலையை கொடுத்து மாட்டிக்கொண்ட கணவன்

கணவன்-மனைவியின் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது. வீடியோவில் மனைவி செய்வதைப் பார்த்தால் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2021, 10:39 AM IST
Viral Video: பார்பருக்கு பதில் மனைவியிடம் தலையை கொடுத்து மாட்டிக்கொண்ட கணவன் title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் கணவன் மனைவி இடையில் நடக்கும் வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. 

தற்போதும் ஒரு கணவன்-மனைவியின் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது. வீடியோவில் மனைவி செய்வதைப் பார்த்தால் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த வேடிக்கையான வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

சில வினாடிகளே உள்ள இந்த வீடியோவில் (Video), கணவன் செய்த ஒரு மிகப்பெரிய முட்டாள்தனத்தை பார்க்க முடிகின்றது. முடி வெட்டுவதற்காக சலூனுக்குச் செல்லாமல், கணவன் தனது தலைமுடியை வெட்ட மனைவியின் உதவியை நாடுகிறார். ஆனால் அப்படி செய்து அவர் பெரிய தவறை செய்து விடுகிறார்.

ALSO READ:‘மாடு பால் கொடுக்க மாடேங்குது’: போலீஸுக்கு வந்த வினோதமான புகார் 

தலைமுடியை வெட்டுவதற்காக பால்கனியில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் கணவன் அமர்ந்திருந்ததையும், மனைவியும் முடி வெட்டுவதற்காக அங்கு செல்வதையும் வீடியோவில் காண முடிகின்றது. முதலில் மனைவி கணவரின் தலை முடியை தண்ணீரில் நனைக்கத் தொடங்குகிறார்.

ஆனால் அந்த நபரின் மனைவி நீண்ட நேரத்திற்கு அந்த நபரின் தலையில் தண்ணீரைத் தெளிக்கிறாள். அதில் கணவர் தனது பொறுமையை இழந்து கோவமடைவது தெரிகிறது.

மனைவியின் செய்கையால் கடுப்பான கணவன் கடைசியாக அருகில் வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் தன் தலையில் ஊற்றிக்கொள்கிறார்.

வீடியோவில் (Viral Video) இதற்குப் பிறகு நடக்கும் விஷயம் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. கணவன் தண்ணீரை தன் தலையில் ஊற்றிக்கொண்ட பின்னரும், மனைவி தொடர்ந்து ஸ்ப்ரே செய்வது பார்ப்பவர்களை பலமாக சிரிக்க வைக்கின்றது. 

அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by hepgul5 (@hepgul5)

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் ஹெப்குல் 5 என்ற பெயர் கொண்ட ஒரு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. நெட்டிசன்களும் வீடியோவுக்கு கமெண்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.

ALSO READ:பேச்சுலர் பார்ட்டியில் உல்லாசமாய் கலக்கும் பெண்களின் கலாட்டா video viral 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News