Aadhaar Update | பொதுமக்களுக்கான முக்கிய தகவல்! இலவசமாக அப்டேட் செய்ய இன்றே கடைசி நாள்!

Aadhaar Update Latest News: பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்வதற்கு இன்று (டிசம்பர் 14) கடைசி நாள்

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 14, 2024, 08:59 AM IST
Aadhaar Update | பொதுமக்களுக்கான முக்கிய தகவல்! இலவசமாக அப்டேட் செய்ய இன்றே கடைசி நாள்! title=

Free Online Aadhaar Update: இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதுக்குறித்து விவரங்களை பார்க்கலாம்.

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இலவசமாக அப்டேட் செய்யலாம் என அறிவித்துள்ளது. 

இந்த மொத்த செயல்முறையும் ஆன்லைன் மூலம் செய்துக்கொள்ளலாம் என்பதால், யூசர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய ஆதார் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். 

10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கக்கூடிய ஆதார் விவரங்களை உடனடியாக அப்டேட் செய்யுமாறு UIDAI பரிந்துரை செய்திருக்கிறது. 

உங்கள் ஆதார் விவரங்களை இன்றைய நிலவரப்படி வைத்திருப்பது பின்வரும் பலன்களை கொடுக்கும். ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதன் மூலம் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் இப்போதைய உங்களுடைய தகவல்களை பிரதிபலிக்கும், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த சேவைகள் கிடைப்பது உங்களுக்கு எளிதாகும். 

ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு செய்யும்போது, அதற்கான வெற்றி விகிதம் அதிகரிக்கிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யலாம்.

ஆதாரில் உள்ள விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும். myaadhaar.uidai.gov.in என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். 

அப்டேட் பிரிவில் காணப்படும் "அப்டேட் யுவர் ஆதார்" என்பதன் கீழ் உள்ள "மை ஆதார்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 

அடுத்து அப்டேட் பக்கத்தில் காணப்படும் "அப்டேட் ஆதார் டீடைல்ஸ்" (ஆன்லைன்) என்பதை கிளிக் செய்து "டாக்குமெண்ட் அப்டேட்ஸ்" என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

அடுத்து உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் கேப்சாவை நிரப்பி "சென்ட் ஓடிபி (OTP)" என்பதை  என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

அடுத்து உங்களுடைய ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஓடிபி (OTP) நம்பரை பயன்படுத்தவும். 

அடுத்து புதிய பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய பெயர் அல்லது முகவரி போன்ற அப்டேட் செய்யப்பட வேண்டிய விவரங்கள் தேர்வு செய்யுங்கள். ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்த பிறகு, அதற்கான டாக்குமெண்ட்டையும் சமர்ப்பிக்கவும்.

ஆதார் அப்டேட் செயல்முறையை நிறைவு செய்த பிறகு, உங்களுடைய ஆதார் அப்டேட் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கு அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் (URN) என்பதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். 

அதேபோல ஆதார் அட்டையில் உங்கள் கருவிழி, கைரேகைகள், மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றை ஆஃப்லைன் மூலமாக மட்டுமே உங்களால் அப்டேட் செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்றவற்றை ஒருமுறை மட்டுமே நீங்கள் அப்டேட் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்வதற்கு இன்று (டிசம்பர் 14) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - புதிய ஆதார் அட்டை பெற.... திருத்தங்கள் செய்ய... சில எளிய வழிமுறைகள் குறித்த முழு விபரம்

மேலும் படிக்க - மாஸ்க் ஆதார் டவுன்லோடு செய்வதில் முக்கிய அப்டேட் -தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

மேலும் படிக்க - இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News