பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?

Priyanka Mohan Troll : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், பிரியங்கா மோகன். இவர், தற்போது நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கி இருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 28, 2024, 06:01 PM IST
  • பிரியங்கா மோகனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
  • வைரலாகும் வீடியோ..
  • என்ன ஆச்சு?
பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன? title=

Priyanka Mohan Troll : தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமான நாயகி, பிரியங்கா அருள் மோகன். கன்னட திரை உலகின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் தமிழில் டாக்டர் படத்தில் நடித்து பிரபலமானார். இவரை இப்போது வெட்டி செங்கல் வைத்து செய்து வருகின்றனர். இதற்கு காரணம் என்ன? 

பிரியங்கா மோகன்: 

தமிழ் திரையுலகை பொருத்தவரை, எந்த நடிகை சினிமாவிற்கு வந்தாலும் அவர்களுக்கு விரைவிலேயே ரசிகர்கள் கூடிவிடுவர். அப்படி, அதிக ரசிகர்கள் கூடய ஒரு நடிகை, பிரியங்கா அருள் மோகன். இவர், தமிழில் முதன்முதலாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். இதில், அறிவே இல்லாத ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த இவர், தொடர்ந்து சிவாவுடன் டான் படத்திலும் ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பினை பெற்றது. 

கர்நாடக பெண்ணான இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்றம் கொடுத்த இன்னொரு படம், எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். 

நெட்டிசன்கள் ட்ரோல்..

நடிகை பிரியங்கா, சமூக வலைதளங்களில் தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகி வருகிறார். “ஒரு சில நடிகைகளுக்கு நடிக்க வராது, ஆனால் ஆட வரும், ஒரு சிலருக்கு நடனமாட வராது ஆனால் நடிக்க வரும். இவருக்கு ஒன்றுமே வராது” போன்ற வசனங்களை பயன்படுத்தி பிரியங்காவை ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா? 

வைரல் வீடியோ..

நடிகை பிரியங்கா மோகனின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு பட விழாவில் அமர்ந்திருக்கும் அவர் தன் அருகில் வந்து செல்ஃபி கேட்ட ரசிகரை முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு திட்டுகிறார். அந்த ரசிகர் தொடர்ந்து செல்ஃபி கேட்க, அவர் செல்ஃபிக்கு சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துவிட்டு, மீண்டும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்கிறார். இது, இணையதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஒரு சிலர், இதற்காக பிரியங்கவை ட்ரோல் செய்ய, இன்னும் சிலர் “ஒரு நடிகை தான் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க மாட்டேன் என சொல்வது தவறா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | காவல் அதிகாரியாக பிரியங்கா மோகன்.. சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் அப்டேட்

பிரியங்கா நடித்த புது படம்..

நடிகை பிரியங்கா, சரிபோதா சனிவாரம் படத்தில் நடித்தார். அந்த படம், சமீபத்தில் வெளியாகி ரசிககர்களின் வரவேற்பை பெற்றது. ஆனால், அதில் பிரியங்காவின் நடிப்பு பெரிதும் ஈர்ப்பது போல இல்லை என ரசிகர்கள் கூறி வந்தனர். ரசிகரின் செயலை கண்டித்தது மற்றும் சரியாக நடிக்காதது என இரண்டுக்கும் சேர்த்து வைத்து பிரியங்காவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

ஜெயம் ரவியுடன் ப்ரதர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியங்கா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில், கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அடுத்து தெலுங்கிலும், “தே கால் ஹிம் ஓஜி” எனும் படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் சம்பள விவரம்! அடடே..இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News