பாதுகாப்பு குழுவினருடன் விமானத்தை பழுது பார்த்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணிக்கும் ஹெலிகாப்டர் கதவில் பழுது ஏற்பட்டதை அடுத்து தனது பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தி பழுதை சரி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : May 11, 2019, 02:07 PM IST
பாதுகாப்பு குழுவினருடன் விமானத்தை பழுது பார்த்த ராகுல் காந்தி! title=

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணிக்கும் ஹெலிகாப்டர் கதவில் பழுது ஏற்பட்டதை அடுத்து தனது பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தி பழுதை சரி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடுந்துள்ள நிலையில், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

இதற்கிடையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆரவாரமாக சுற்றி வருகின்றனர். அந்த வகையில் மக்களவை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஹிமாச்சல் பிரேதசம் சென்ற ராகுல் காந்தி, தான் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் சிறிய பழுது ஏற்பட, தனது பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து அந்த பழுதை நீக்க உதவியுள்ளார்.

தான் பழுதை நீக்கும் இந்த வீடியோவையும் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராகுல் தனது பதிவில் குறிப்பிடுகையில்., "சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்ததால் விரைவாக பழுது சரிசெய்யப்பட்டது. பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.

ராகுலின் இந்த பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News