சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி தோற்றுப்போனது. ஆனால், ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலியின் ‘நோ லுக் சிக்ஸ்’வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை விராட் கோலி எதிர்கொண்டபோது, அது ஷார்ஜா ஸ்டேடியத்தை விட்டு வெளியேறியது அனைவரின் மனதையும் கவந்த சிக்ஸராக இருக்கிறது.
போட்டியின் ஐந்தாவது ஓவரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கோஹ்லிக்கு வீசிய பந்து 82 அடி தூரம் சென்று விழுந்தது. கோலியின் மட்டையில் பட்ட பந்து, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலிருந்து பறந்து சென்றுவிட்டது.
Also Read | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) கேப்டன் விராட் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர், ஐபிஎல் 2021 இல் தனது ஃபார்முக்கு மீண்டு வந்தார். இந்த சூப்பர் விளாசல், கோஹ்லியின் 'நோ-லுக் சிக்ஸ்' (Kohli’s 'no-look six') என்று தலைப்புச் செய்தியாக இடம் பிடித்துவிட்டது.
கோஹ்லியின் அருமையான ஷாட் பற்றி பேசிய வர்ணனையாளர் சைமன் டவுல் (Simon Doull), "நான் இந்த சிக்ஸரை பார்க்க கூடத் தேவையில்லை, சத்தமே போதும்" என்று தெரிவித்தார். கோலியீன் சிக்ஸர் பற்றி குறிப்பிட்ட சுனில் கவாஸ்கர், "பந்துவீச்சாளர்கள் தங்கள் கனவுகளில் கேட்கும் ஒலி அது. அது தான் இனிமையான ஒலி. என்ன ஷாட்! அது மட்டையிலிருந்து எழுந்து இனிமையாக ஒலித்தது".
கோஹ்லியின் நோ-லுக் சிக்ஸின் வீடியோ இதோ:
— Rishobpuant (@rishobpuant) September 24, 2021
குறிப்பிடத்தக்க வகையில்கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கு எதிராக ஆர்சிபியின் முந்தைய தோல்விக்குப் பிறகு தற்போது கோஹ்லி மீண்டும் பார்முக்கு திரும்பினார். ஆர்சிபி கேப்டன் 6 பவுண்டரி மற்றும் நோ-லுக் சிக்ஸர் உதவியுடன் அரை சதம் அடித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தேவதூத் படிக்கல் (70) மற்றும் கோஹ்லி (53) ஆகியோர் அணிக்கு முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை எடுத்தார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் பெங்களூருவை 20 ஓவர்களில் 156/6 என்ற நிலையில் கட்டுப்படுத்திவிட்டார்கள்.
பின்னர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (Faf du Plessis) தங்கள் அருமையான பேட்டிங்கின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை அணி புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.
போட்டியின் சிறந்த ரன் எடுத்த பேட்டர்கள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (தேவதூத் படிக்கல் 70, விராட் கோலி 53; டுவைன் பிராவோ 3-24, ஷர்துல் தாக்கூர் 2-29). சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட் 38, அம்பதி ராயுடு 32; ஹர்ஷல் பட்டேல் 2-25, யுஸ்வேந்திர சாஹல் 1- 26).
Also Read | CSK vs RCB: சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி புகைப்படத் தொகுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR