பாலத்தின் நடுவில் தொங்கும் பேருந்து! இறுதியில் என்ன ஆனது என்று பாருங்கள்!

எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு மேம்பாலங்களுக்கு இடையே கர்நாடக பேருந்து ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 23, 2024, 08:45 AM IST
  • கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து.
  • மேம்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
  • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாலத்தின் நடுவில் தொங்கும் பேருந்து! இறுதியில் என்ன ஆனது என்று பாருங்கள்! title=

பெங்களூரு-துமகுரு நெடுஞ்சாலையில் கர்நாடக அரசு பேருந்து ஒன்று விபத்திற்கு பிறகு சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தொங்கியது. கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து மேம்பாலத்தில் இருந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அந்த பேருந்து 40 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெலமங்களாவுக்கு அருகில் உள்ள மதநாயக்கனஹள்ளி பாலம் அருகே கடந்த மே 18ஆம் தேதி காலை இந்த விபத்து நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த மேம்பாலத்தின் வளைவில் மோதியது. 

மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!

மேம்பாலத்தில் மோதிய பேருந்து கீழே விழாமல் தொங்கியபடி இருந்தது. பேருந்தில் இருந்த டிரைவர், கண்டக்டர் உட்பட 8 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். பிறகு போலீசாரின் பாதுகாப்புடன் அனைவரும் பேருந்தில் இருந்து பத்திரமாக இறங்கி வெளியே வந்தனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும் இந்த விபத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சோம்வார்பேட்டையில் இருந்து பெங்களூருவுக்கு சுமார் 40 பயணிகளுடன் சென்ற இந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post sha

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரல் ஆகி வருகிறது. பேருந்து விபத்தான வீடியோவில் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், "ஓட்டுனர் வேகமாக பக்கத்து பலத்திற்கு போலாம் என்று  யோசித்து இருப்பார் போல" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டை அமைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இன்று ஒன்றும் ஆச்சரியமில்லை. பெங்களூரில் எல்லோரும் இப்படித்தான் ஓட்டுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News