மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிய வீடியோ இணையதளத்தில் வைரல்!!
மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, அம்மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன் கைகளால் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதலபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திகா பகுதியிலுள்ள தத்தாப்பூர் கிராமத்துக்குச் சென்ற அவர், உள்ளூர் மக்களுடன் அளவளாவிய பின் அங்கிருந்த தேநீர் கடையில் தாமே தேநீர் தயாரித்து சுற்றியிருந்தவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார். இந்த வீடியோவை மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், " சில சமயங்களில் சின்னச் சின்ன உற்சாகங்கள் தான் வாழ்க்கையை ச்ந்தோஷமாக மாற்றும். இன்று துட்டாபுரில் அனைவருக்கும் டீ தயாரித்து கொடுத்தேன். எனக்கு சமையலறையில் வேலை செய்வதும், சமைப்பதும் மிகவும் பிடிக்கும். ஆனால் நேரமின்மை காரணமாக அதை மிகவும் தவற விடுகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மிட்னாபூரின் திகாவில், ஒரு டி.எம்.சி கோட்டையான மம்தா பானர்ஜி தேநீர் தயாரித்து சாதாரண மக்களுக்கு பரிமாறுவதைக் காண முடிந்தது. அந்த வீடியோவை வங்காள முதல்வரும் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அவர் திகாவின் டி-யில் உள்ளூர்வாசிகளுடன் உரையாடினார்.