படக்குழுவினருக்கு உதவும் மோகன் லால்; வைரலாகும் Video!

லூசிபர் படப்பிடிப்பின் போது  படக்குழுவினருக்கு நாயகன் மோகன்லால் உதவிய வீடியோவினை இயக்குநர் ப்ரித்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Updated: May 16, 2019, 06:07 PM IST
படக்குழுவினருக்கு உதவும் மோகன் லால்; வைரலாகும் Video!

லூசிபர் படப்பிடிப்பின் போது  படக்குழுவினருக்கு நாயகன் மோகன்லால் உதவிய வீடியோவினை இயக்குநர் ப்ரித்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் லூசிபர். இந்தப் திரைப்படத்தை மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சக்கப்போடு போட்டது. இந்நிலையில் ரஷ்யாவில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் ப்ரித்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளா. அந்த வீடியோவில் மண் மூட்டைகளை மோகன் லால் சுமந்து சென்று ஒளிப்பதிவாளருக்கு உதவுவது போல் உள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ப்ரித்விராஜ் தனது பதிவில் குறிப்பிடுகையில்., ‘ரஷ்யாவில் -16 டிகிரி செல்சியஸ். இரண்டு மண் மூட்டைகளும் 20 கிலோவுக்கு அதிகமாக இருக்கும். நாங்கள் அவர் தங்குவதற்காக தனி இடம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அவர் எங்களுடன் தங்குவதையே விரும்பினார். மேலும் படப்பிடிப்புக்காக உதவினார்’ என குறிப்பிட்டுள்ளார்.