இந்த சாமியாரின் உறவினர் மற்றும் போமாவின் பஞ்சாயத்து தலைவர் தான் கோவிலை நிர்வகிக்கிறார். ஒரு பாத்திரத்தில் மதுவை சேகரித்து தனது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதாக கூறினார், ஆனால் அவர் ஒருபோதும் குடித்ததில்லையாம்!
அமிர்தசரஸ்: ஒரு கோவில் ஏராளமான பக்தர்கள் மதுபானத்தை கடவுளுக்கு படைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், முகக்கவசம் அணியாமல் பெருங்கூட்டமாக பக்தர்கள் கூடியிருக்கின்றனர். சமூக இடைவெளி காற்றில் பறந்துவிட்டது.
#WATCH | Devotees offered liquor at Baba Rode Shah shrine and distributed it among themselves as 'prasad' during a two-day annual fair that started in Bhoma village in Amritsar district of Punjab on Tuesday. pic.twitter.com/hHACdlU34b
— ANI (@ANI) March 23, 2021
இது பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா ஆலயத்தில் நடைபெறும் விழா. கடவுளுக்கு காணிக்கையாக பக்தர்கள் மது பாட்டில்களை வழங்குவதைக் காணலாம். கடவுளின் கடைக்கண் பார்வை தன்மீது படாத என்று ஏங்கும் பக்தர்கள், இங்கு மதுபானம் படைக்கும் சடங்கு கடந்த 90 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமிர்தசரஸ்-ஃபதேஹ்கர் சாலையில் அமைந்துள்ள போமா கிராமத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் இந்த சாராய படையல் திருவிழா நடைபெறுகிறது.
Also Read | Cook with MLA: சிக்கன் 65 சமைத்து மக்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர்
வைரலாகி வரும் வீடியோவில், கையில் மது பாட்டில்களைக் வைத்திருக்கும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுகின்றனர். வீடியோ தொடரும்போது, தலைப்பாகை அணிந்திருக்கும் ஆண்களின் ஒரு குழு, மதுவை சேகரித்து அதையெல்லாம் ஒரு பெரிய வாளியில் ஊற்றுவதை காணலாம். மேலும், வீடியோவின் முடிவில், ஒரு மனிதன் கண்ணாடி கிளாஸ்களில் மதுபானத்தை ஊற்றி பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பதைக் காணலாம்.
வைரலாகிவிட்ட இந்த வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். பல முறை ரீட்வீட் செய்யப்பட்டு பலரால் விரும்பப்பட்டது.
இந்தக் கோவிலில். ஆண்டு முழுவதும் மதுபானம் படைக்கப்பட்டு, பிரசாதமாக விநியோகிக்கப்பட்டாலும், இந்த இரண்டு நாள் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR