பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கட்டித்தழுவிய வீடியோ காட்சி சமூக வளைத்தளத்தில் வைரல்.
கடந்த 9 வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இவருக்கு வயது 93. அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.
வாஜ்பாய் உடல் நிலை பற்றி கேட்டறிய இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர்.
தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மற்றொரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கட்டித்தழுவிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.