உங்கள் Facebook கணக்கு பாதுக்காப்பாக உள்ளதா? எப்படி அறிவது!

மனத வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிவிட்ட Facebook கணக்கு சிலருக்கு பொழுது போக்கு., பலருக்கு சேமிப்பு கிடங்கு. ஆம் தாங்கள் செல்லும், செய்யும் செயல் என அனைத்தையும் பதிவிட்டு ஒரு கையடக்க டைரி போல் மாற்றிவிடுகின்றனர். 

Written by - Mukesh M | Last Updated : May 12, 2019, 06:33 PM IST
உங்கள் Facebook கணக்கு பாதுக்காப்பாக உள்ளதா? எப்படி அறிவது! title=

மனத வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிவிட்ட Facebook கணக்கு சிலருக்கு பொழுது போக்கு., பலருக்கு சேமிப்பு கிடங்கு. ஆம் தாங்கள் செல்லும், செய்யும் செயல் என அனைத்தையும் பதிவிட்டு ஒரு கையடக்க டைரி போல் மாற்றிவிடுகின்றனர். 

சிலர் தங்கள் பதிவிடும் விஷயங்களை நம்பிக்கைக்குறிய நண்பர்களை தவிர வேறு யாருக்கும் காண்பிக்க வேண்டாம் என Facebook வசதி மூலம் தங்களது தகவல்கள் பத்திர படுத்துகின்றனர். நல்லது தான், ஆனால் உங்கள் கணக்கையே யாரேனும் திருடிவிட்டால்?... அதாவது உங்கள் கணக்கை ஹாக் செய்து உங்களுக்கு தெரியாமல் பயன்படுத்தி வந்தால்?... அதை எப்படி தடுப்பது?., எவ்வாறு பாதுகாப்பது?.,

தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துப்படி ‘ஒரு தனி நபர் கணக்கை ஹாக் செய்ய வேண்டுமென்றால், அந்த தனி நபரை முதலில் ஹாக் செய்யவேண்டுமாம்’ அதாவது உங்கள் தனிபட்ட கணக்கை யாரேனும் ஹாக் செய்ய விரும்பினால், அவர் உங்களை பற்றி நன்கு அறிந்தாலே போதுமானது., உங்கள் கணக்கை சுலபமாக ஹாக் செய்துவிடலாம் என தெரிவிக்கின்றனர்.

எனவே முதலாவதாக., உங்கள் பேஸ்புக் கணக்கிற்கு உங்கள் மொபைல் எண், பிறந்த தேதி, செல்ல பிரானி பெயர், காதலன் - கணவன் பெயர் என எளிதான பாஸ்வேர்ட் வைப்பதை தவிறுங்கள். இரண்டாவது அவ்வப்போது உங்கள் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது.

சரி விஷயத்திற்கு வருவோம்., பேஸ்புக் தனது வாடிக்கையாளரின் வசதிக்காக புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் பயனரது கணக்கு கடந்த சில நாட்களா "எப்போது, எந்த இடத்தில் இருந்து, எந்த கணினியில் இருந்து லாக் இன் செய்யப்பட்டுள்ளது என அறிந்துக்கொள்ளலாம். இந்த பட்டியல் மூலம் உங்கள் கணக்கை உங்கள் அனுமதி இன்று வேறு யாரேனும், எங்கோ இருந்து பயன்படுத்துகின்றாரா என அறிந்துக்கொள்ளலாம். ஒருவேளை யாரேனும் உங்களை அறியாது பயன்படுத்தி இருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அவரது மொபைல் (அ) கணினில் இருந்து உங்கள் கணக்கை லாக்-அவுட் செய்லாம்., செய்த பின்னர் உடனடியாக உங்களது பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள்.

சரி இதை எப்படி செய்வது?

  • உங்கள் பேஸ்புக் கணக்கில் லாக்-இன் செய்யவும்.
  • பின்னர் Settings பக்கத்திற்கு செல்லவும்., Settings பக்கத்தில் இடது பக்கம் Security and Login வசதியை கிளிக் செய்யவும்.
  • பின்னர் தோன்றும் பக்கத்தில் காணப்படும் Where You're Logged In என்னும் வசதியின் கீழ்., உங்கள் கணக்கு எப்போது, எங்கு, எந்த கருவில் இயக்கத்திற்கு வந்தது என தெரிந்துக்கொள்ளலாம்.

இது சிம்பில் விஷயம் தான்., இதை விட விநோத சித்து வேலைகளை சில ஹாக்கர்கள் செய்வதுண்டு. அதை தடுப்பது கடினம் தான் என்றாலும் இந்த சிறிய யுக்தி கொண்டு அவ்வப்போது உங்கள் பேஸ்புக் கணக்கை பராமரிப்பது நல்லது.

Trending News