வனப்பகுதியில் ‘மரண விளையாட்டு’ என்பது வாழ்வாதாரம். அங்கிருக்கும் வாழ்க்கைச் சூழலை பொறுத்தவரை ‘ இங்கு சரியுமில்ல, தவறுமில்ல போடா’ என்ற என்ற வாசங்களின் அடிப்படையில் தான் இருக்கும். ஒவ்வொரு விலங்குகளும் வேட்டையாடி மட்டுமே உணவை சாப்பிட வேண்டியிருக்கும். சில விலங்குகள் வேட்டையாட முடியாவிட்டால் மற்ற விலங்குகள் வேட்டையாடும் உணவை பறித்துச் சென்று உண்ணும்.
ALSO READ | CIA எய்ட்ஸ் நோயை பரப்பியதா? தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சொன்னது என்ன?
சில நேரங்களில் அந்த யுக்தி கைகொடுக்கும், பல நேரங்களில் அந்த யுக்தி கைக்கொடுக்காது. காலம் வரும்போது ஒவ்வொரு விலங்குக்கான ’காலன்’ மாறிக்கொண்டே இருப்பான். அதாவது, ஒருநாள் ஓநாய்களை அடித்து சாப்பிடும் சிங்கம், காலச்சூழலில் அதே ஓநாய்களுக்கு இரையாக வேண்டிய நிலையும் வரும். இது வனப்பகுதியில் எழுதப்பட்ட இயற்கை விதி.
When small handle on twitter try to share the tweet before the influencer......#TuesdayFeeling pic.twitter.com/fRrF875p6Z
— WildLense® Eco Foundation (@WildLense_India) January 25, 2022
இந்நிலையில், காட்டின் ராஜாவாக பார்க்கப்படும் சிங்கம், அண்மையில் பார்வையால் ஓநாய்களை ஓட விட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. வனப்பகுதி ஒன்றில் வேட்டை உணவை தின்று கொண்டிருக்கும் சிங்கத்தின் அருகில் 2 ஓநாய்கள் செல்கின்றன. அப்போது, தலையை கம்பீராக உயர்ந்து முறைத்து பார்க்கும் சிங்கத்தை பார்த்தவுடன், ஓநாய்கள் வந்த வழி தெரியாமல் பின்னோக்கி ஓடி விடுகின்றன. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் மெய்சிலிர்த்துள்ளனர்.
ALSO READ | சிறுமியின் புஷ்பா ஹூக் ஸ்டெப்! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR