கல்யாண சமையல் சாதம்! வைரலாகும் லைவ் கடோத்கஜன்! Video Viral

கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடலை ஒருமுறையாவது கேட்காதவர்கள் இருக்க முடியாது. 1957ஆம் ஆண்டு வெளியான மாயாபஜார் படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் உலகப்புகழ் பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 03:30 PM IST
கல்யாண சமையல் சாதம்!  வைரலாகும் லைவ் கடோத்கஜன்!  Video Viral  title=

கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடலை ஒருமுறையாவது கேட்காதவர்கள் இருக்க முடியாது. 1957ஆம் ஆண்டு வெளியான மாயாபஜார் படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் உலகப்புகழ் பெற்றது.

இந்தப் பாடலுக்கு எஸ்.வி.ரெங்கா ராவ் கடோத்கஜனாக அருமையாக நடித்திருப்பார்.  “கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்” எனத் தொடங்கும் அந்தப் பாடல், திருமண வீடுகளில் ஒலிப்பது வழக்கம்.

ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல், தற்போது வேறொரு வடிவம் எடுத்திருக்கிறது. திருமண விருந்தில் (Wedding Feast) எஸ்.வி.ரெங்கா ராவ் போல வேடமிட்ட ஒருவர் அந்த பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் வீடியோ, வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

 

மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த புராண திரைப்படம் எஸ்.வி. ரங்கா ராவின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்பது குறிப்ப்டத்தக்கது.

அதிலும், அந்த நடிகர், கல்யாண சமையல் சாதம்... ஹஹஹஹஹஹ... என்று சொல்லும்போது அங்கு நிற்பவர்களின் கால்களும் தானாகவே தாளம் போடுவதைக் காண முடிகிறது.

வைரலாகும் இந்த திருமண வீடியோவில், பஃபே எனப்படும் விருந்துக் கூடத்தின் நடுவே ஒரு மேஜை மீது ஒருவர் நின்றுக் கொண்டு பாடலுக்கு அபிநயம் பிடிக்கிறார். பொருத்தமான இடத்திற்கு உகந்த பாடல் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள்.

ALSO READ | குழந்தைகளுக்கு அதிக ஆபத்தான உணவுகள்! கண்டிப்பாக தவிர்க்கவும்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News