உப்பை வைத்து உங்கள் அழகை அதிகரிக்க சில டிப்ஸ்!!

பொதுவாக பெண்கள் தங்களது சருமத்தைப் பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவர். சிலர் முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். இதனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகமே. சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படுவம் உப்பு, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது. 

Last Updated : May 7, 2018, 02:30 PM IST
உப்பை வைத்து உங்கள் அழகை அதிகரிக்க சில டிப்ஸ்!! title=

பொதுவாக பெண்கள் தங்களது சருமத்தைப் பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவர். சிலர் முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். இதனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகமே. சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படுவம் உப்பு, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது. 

வெறும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம். 

1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும். 

2 டீஸ்பூன் கல்  உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10 நிமி ஊற வைத்து பின் கழுவினால் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் மசாஜ் செய்தால் கண்களில் ஏற்பட்டுள்ள கண்கருவளையம் மறைந்து விடும்.

Trending News