இன்றைய ராசிபலன் 13 மே 2024: இன்று ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

Today's Horoscope for May 13: மே மாதம் 13ம் நாள் திங்கட்கிழமை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2024, 06:00 AM IST
  • மே மாதம் 13 ராசிபலன்
  • யோகத்தால் யோகம் பெறும் ராசிகள்
  • மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்
இன்றைய ராசிபலன் 13 மே 2024: இன்று ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்! title=

May 13 Rasipalan:  குரோதி, சித்திரை 30 புனர்பூசம் நட்சத்திர நாளான இன்று எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்

13-05-2024 ராசி பலன்கள்

மேஷம் 
வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதரவு மேம்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள்.  

ரிஷபம் 
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஈடேறும். உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு பெருகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும்.  

மிதுனம் 
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். வியாபார முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.  

கடகம் 
கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்பு உண்டாகும். 

சிம்மம் 
பயனற்ற செலவுகளை குறைக்கவும். திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். 

மேலும் படிக்க | Mercury transit in Aries & LUCKY Zodiacs: மேஷத்தில் புதன் பெயர்ச்சி... வைகாசியில் பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்!

கன்னி

எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.  சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் எண்ணங்களை அறிவீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். 

துலாம் 
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் நாள் இது துலாம் ராசிக்காரர்களே. விவசாய பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணி சார்ந்த சில முயற்சிகள் கைகூடும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது அவசியம். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும்.  

விருச்சிகம் 
புதியவரின் நட்பால் உற்சாகம் உண்டாகும். நுட்பமான சில விஷயங்களை அறிவீர்கள். வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபார இழப்புகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

தனுசு
சிந்தனைகளில் கவனம் வேண்டும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். மறதி பிரச்சனையால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். உதாசினமான கருத்துகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

மகரம்
மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். குழந்தைகளால் மதிப்பு கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில சலுகைகள் சாதகமாக அமையும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு உயரும். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்
கனிவான பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டு பேசுவது புரிதலை அதிகப்படுத்தும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நன்மை நிறைந்த நாள். 

மீனம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த எண்ணம் மேம்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கலை துறைகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

மேலும் படிக்க | Saturn Transit: உச்சம் பெற்றார் சனி: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News