சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, வெற்றிவாகை சூடுவார்கள்

Saturn Retrograde 2022: ஜூன் 5 ஆம் தேதி முதல் வக்ரமாகியுள்ள, அதாவது பிற்போக்கு நகர்வைத் தொடங்கியுள்ள சனி இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2022, 02:02 PM IST
  • சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால், 2024 வரை மேஷம், ரிஷபம், தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும்.
  • சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும்.
  • ரிஷப லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு 2024 வரை உள்ள காலத்தில் சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, வெற்றிவாகை சூடுவார்கள் title=

சனி வக்ர பெயர்ச்சி 2022: ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கபப்டுகிறார். சனி பகவான் கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கின்றார். 

சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால், 2024 வரை மேஷம், ரிஷபம், தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதார, குடும்ப வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் சனியின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஜூன் 5 ஆம் தேதி முதல் வக்ரமாகியுள்ள, அதாவது பிற்போக்கு நகர்வைத் தொடங்கியுள்ள சனி இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறார்.

மேஷம்
- ஜோதிட சாஸ்திரப்படி, சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும். 

- மேஷ ராசிக்காரர்களின் பண வரவு அதிகமாகும். 

- வேலை செய்பவர்களின் ஊதியம் உயரும்.

- வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். 

- வேலை மாற விரும்புபவர்களுக்கும் இந்த காலத்தில் மேன்மையான வேலை கிடைக்கும். 

மேலும் படிக்க | சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து: விவரம் இதோ 

ரிஷபம்

- ரிஷப லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு 2024 வரை உள்ள காலத்தில் சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கும்.

- கர்ம வீட்டில் சனியின் சஞ்சாரம் தொழிலில் வெற்றியைத் தரும்.

- தொழில்-வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

- குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும்.

- வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, மரியாதை, கௌரவம் என அனைத்தும் கிடைக்கும்.

- தொழிலதிபர்களும் நிதி ஆதாயங்களைப் பெறலாம்.

தனுசு

- தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு நகர்வு வரப்பிரசாதமாக அமையும்.

- 2024 ஆம் ஆண்டுக்குள், தனுசு ராசிக்காரர்கள் பொதுவாக அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள்.

- உங்கள் வலிமை, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

- பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள்.
 
- வியாபாரிகளின் வருமானம் உயரும்.

- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

- நண்பர்கள், உறவினர்களிடமிருந்து அனுகூலமான செய்தியை பெறுவீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Planet Transit 2022:செவ்வாயின் அருளால் ஜூலை 4க்குள் புதிய பணி மற்றும் பதவி உயர்வு பெறும் யோக ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News