தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்பவரா? கட்டாயம் இதை செய்ய வேண்டாம்

Astro Remedies: பரிகாரங்கள் செய்யும்போது கட்டாயம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பரிகாரத்திற்கு பலன் இல்லாமல் போய்விடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 19, 2022, 02:52 PM IST
தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்பவரா? கட்டாயம் இதை செய்ய வேண்டாம் title=

வாழ்க்கையில் வெற்றி பெற நம்முடைய முயற்சிகளுடன் அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும். ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள், ஜோதிட பரிகாரங்கள் செய்ய விரும்புவார்கள். அப்படி செய்யும் பரிகாரங்களை சரியான வழியிலும் முறையிலும் செய்தால் தான் அவை பலன் அளிக்கும். வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது அனைவரின் விருப்பமாக இருந்தாலும், அவரவர் விதிப்பயன் அல்லது ஜாதக அமைப்பின்படி சில பரிகாரங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

பண வரத்து, குழந்தை பாக்கியம், நிம்மதி, பதவி உயர்வு என பல விஷயங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பலர் பல பரிகாரங்களை செய்கின்றனர். பரிகாரங்களின் உதவியுடன், தடைகள் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

எந்த வகையான ஜோதிட பரிகாரங்கள் செய்வதாக இருந்தாலும், அதற்கு முன்னதாக ஜோதிடர் அல்லது பண்டிதரை அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கர்ம கணக்குகளை தயவு தாட்சண்யம் இன்றி பைசல் செய்யும் சனீஸ்வரர் 

எந்தவொரு பரிகாரத்தையும் செய்யும்போது, ​​நான் செய்த இந்த வேலை கடவுளின் அருளால் எனக்கு நல்ல பலனைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும்போது அதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் ரகசியத்தைப் பராமரிப்பது நல்லது.  
அனைத்து பரிகாரங்களும் முழுமையான நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.
முழு மனதுடனும் மற்றும் விசுவாசத்துடனும் செய்யப்படும் பரிகாரங்களே வெற்றிகரமான பலன்களைக் கொடுக்கும்.  
பணம் தொடர்பான பரிகாரங்கள் செய்வதற்கு வளர்பிறை காலம் உகந்தது.  
வேதங்களில், சதுர்த்தி, நவாமி மற்றும் சதுர்தாஷி ஆகியவை ரிக்தா திதி என்று கருதப்படுகின்றன, அதாவது ஒரு வெற்று நாள். எனவே பொதுவாக அந்த நாட்களில் பரிகாரம் செய்வதாக இருந்தால் நன்கு விஷயம் அறிந்தவர்களிடம் தெரிந்துக் கொண்டு, ஆலோசனை பெற்ற பிறகு பரிகாரங்கள் செய்யவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | சுபகிருது ஆண்டின் புரட்டாசி மாத ராசிபலன்! கவனமாக இருங்கள் மேஷ ராசிக்காரரே! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News