சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்!!

Shani Vakri 2023: கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி ஆனவுடன், சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி வரை இந்த நிலையிலேயே இருப்பார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2023, 03:41 PM IST
  • கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில், மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்!!  title=

சனி வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை வருடங்கள் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சியானார். மேலும் ஜூன் 17 ஆம் தேதி, அவர் கும்ப ராசியிலேயே வக்ர நிலையில் மாறப்போகிறார். 

கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி ஆனவுடன், சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி வரை இந்த நிலையிலேயே இருப்பார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகி வருகிறது.

கேந்திரீய திரிகோண ராஜயோகம்

ஜோதிடத்தில் இது அதிர்ஷ்டமான ராஜயோகமாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் 3, 4, 7, 10 மற்றும் 1, 5, 9 போன்ற முக்கோணங்கள் சேர்ந்தால், கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இதில், அன்னை மகாலட்சுமி முக்கோணத்தின் தேவியாகவும், விஷ்ணு மத்திய தெய்வமாகவும் ஆராதிக்கப்படுகிறார்கள். மத்திய திரிகோண ராஜயோகத்தால் ஒருவரது அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இக்காலத்தில் அரசாங்கச் சலுகைகளும் உத்தியோகத்தில் உயர் பதவியும் கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பலன்களை அள்ளித் தருவார்

ரிஷப ராசி

ஜோதிட சாஸ்திரப்படி கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் வேலையில் சாதகமான மாற்றங்களைக் கொடுக்கும். இந்த காலத்தில் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்கள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இது முதலீட்டிற்கு ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். சனியின் அருளால் இவர்கள் இரவும் பகலுமாக உழைத்து பன்மடங்காக முன்னேற்றம் அடைவார்கள்.

மேலும் படிக்க | குரு உதயம் பலன் 2023: ஆண்டு முழுக்க இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகுது

மிதுன ராசி

கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் குண்டலியின் ஒன்பதாவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில், மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இந்த பயணங்களால் எதிர்காலத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நல்ல முடிவுகளை அளிக்கும். உங்கள் ஆராய்ச்சிகளில் அபார வெற்றிகளை பெறுவீர்கள். மறுபுறம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் நல்ல பலன்கள் காத்திருக்கின்றன. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. 

சிம்ம ராசி

ஜோதிடத்தின் படி, சிம்ம ராசிக்காரர்களுக்கு வக்ர சனியால் அதிகப்படியான நன்மை உருவாகும். வழக்கமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டில் சனியின் ஆட்சி நடக்கிறது. இந்த நேரத்தில், நீங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். மேலும் இந்த காலத்தில் நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நாள்பட்ட நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மக்களே உஷார்..விரைவில் சனி வக்ர பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு மட்டும் பம்பர் ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News