இன்னும் 21 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

Sani Vakra Peyarchi Palangal: சனியின் அஸ்தமனம், எழுச்சி, வக்ர பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாகும். அந்த வகையில் தற்சமயம் சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசியில் நிகழப்போகிறது. இது சில ராசிகளுக்கு பண வரவு, ராஜயோகத்தை தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 9, 2024, 01:34 PM IST
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும்.
  • நிதிநிலை நன்றாக இருக்கும்.
  • புதிய முதலீட்டு விருப்பங்களைப் பெறலாம்.

Trending Photos

இன்னும் 21 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம் title=

Sani Vakra Peyarchi Palangal: சனி மிகவும் முக்கியமான கிரங்களின் ஒன்றாகும். மேலும் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பார். இதனல் தான் சனியை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம். அதுமட்டுமின்றி சனிபகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஏனெனில் சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செய்ய இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளும். ஆகையால் அவரது தாக்கம் அனைத்து ராசிகளிலும் மிக நீண்ட காலம் இருக்கும். 

இந்நிலையில் சனிபகவானின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ரப் பெயர்ச்சி (Sani Vakra Peyarchi) , வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. அந்த வகையில் சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசியில் நிகழ உள்ளது. ஜூன் 30 முதல், சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. மேலும் நவம்பர் 15 ஆம் தேதி வரை அவர் வக்ர நிலையில் இருப்பார். எனவே சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பண வரவு அதிகமாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

துலாம் (Libra Zodic Sign): சனி வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்து வரும் 5 மாதங்களுக்கு சாதகமான பலனைத் தரும். சனியின் தாக்கத்தால் (Shani Dev) பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பதவி, கௌரவம் உயரும். நிதி விஷயங்களில், நீங்கள் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் நீங்கள் பல புதிய முதலீட்டு விருப்பங்களைப் பெறலாம்.

கன்னி (Virgo Zodiac Sign): கும்ப ராசியில் சனியின் வக்ரபெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம். உங்கள் வாழ்க்கையில் நல்ல பலனை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். நிதி நிலையும் நன்றாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign): கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடுத்த 5 மாதங்களுக்கு விருச்சிக ராசியினருக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் பல நல்ல முதலீடுகளைக் காணலாம். காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உங்கள் தொழில் வாழ்க்கையில் பல பணிகளைப் பெறலாம், இது உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News