குரு பெயர்ச்சி 2023: அட்டகாசமான பலன்களை பெறப்போகும் ராசிகள் இவைதான், உங்க ராசியும் இதுவா?

Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் மீது இதன் சிறப்பு பலன்கள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 21, 2023, 08:37 PM IST
  • குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
  • குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • இந்த காலகட்டத்தில் நீங்கள் திட்டமிட்டிருந்த இலக்கை அடைவீர்கள்.
குரு பெயர்ச்சி 2023: அட்டகாசமான பலன்களை பெறப்போகும் ராசிகள் இவைதான், உங்க ராசியும் இதுவா?

குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அனைத்து கிரகங்களும் ஒரு ராசியிலிருந்து வெளியேறி மற்றொரு ராசிக்குள் நுழைகின்றன. இது அனைத்து ராசிகளையும் சாதகமாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கிறது. இந்த கிரகங்களின் இயக்கம் மற்றும் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தேவர்களின் குருவான வியாழன் ஏப்ரல் 22 அன்று, மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். 

குரு பகவான் மே 1, 2024 வரை இந்த ராசியில் இருப்பார். தற்போது ஏப்ரல் மாதத்தில் குரு மீனத்திலிருந்து விலகி மேஷத்தில் பெயர்ச்சியாக உள்ளார். குருவின் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். 

12 ஆண்டுகளுக்குப் பிறகு தேவகுரு வியாழன் மேஷ ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார் என்பது சிறப்பு. ஏப்ரல் 22, சனிக்கிழமை அதிகாலை 04.42 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசியில் பிரவேசித்து மே 1, 2023 வரை இந்த ராசியில் இருப்பார். ஞானம், கல்வி, தொண்டு மற்றும் குழந்தைகளின் காரணியாக தேவகுரு இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் மீது இதன் சிறப்பு பலன்கள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்: 

இந்த கிரகப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திட்டமிட்டிருந்த இலக்கை அடைவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது முடிவடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். மரியாதை கூடும். இதனுடன், பணியிடத்தில் உங்கள் வேலையைப் பார்த்து, பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கொடுக்கப்படலாம். 

மேலும் படிக்க | புதன், ராகு, சுக்கிரனின் மகாசங்கமம்: இந்த ராசிகளுக்கு அசத்தல் நன்மைகள், அசாத்திய வெற்றிகள்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். குருவின் இந்த கிரகப் பெயர்ச்சி பலனளிக்கும். வருமானத்தைப் பெருக்க புதிய வழிகள் காணப்படும். செயல்களில் வெற்றி உண்டாகும். மிதுன ராசியில் ராகு, சூரியன், புதன், வியாழன் இணைவது சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை இக்காலத்தில் முடிக்க முடியும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீரென எங்கிருந்தோ பண வரவு ஏற்படும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கும். அனைத்துத் துறைகளிலும் வெற்றியைப் பெறுவதோடு முன்னேற்றத்தையும் அடைவார்கள். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி: 

குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளைத் தரப்போகிறது. முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது இருக்கும். உங்கள் வணிகம் அல்லது அலுவலக பணிகளிலும் புதிய திட்டங்களை இப்போது செயல்படுத்த முடியும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். சமயப் பணிகளில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் முடிவுகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் உங்கள் முடிவுகளை ஆதரிப்பார்கள்.

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மற்றும் தொழில் வெற்றிக்கான வாய்ப்புகள் இந்த காலத்தில் அதிகம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். இந்த ராசிக்காரர்கள் திருமணமானவர்களாக இருந்தால், கணவன் மனைவி பரஸ்பர உரையாடலில் பணிவுடன் இருக்க வேண்டும். சிறு விஷயங்களில் சண்டை சச்சரவுகள் தேவையில்லாமல் டென்ஷனை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 7 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பண விரயம், உடல் நலம் கெடும், ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News