குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

Guru Peyarchi 2023: குருவின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலிலும் மாற்றங்கள் காணப்படும், இருப்பினும், நான்கு ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 14, 2023, 10:56 AM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இக்காலகட்டத்தில் பொருளாதாரப் பலன்கள் உண்டாகும்.
  • புதிய வேலையைத் தொடங்கி வெற்றி பெறுவீர்கள்.
குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும் title=

குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அனைத்து கிரகங்களும் ஒரு ராசியிலிருந்து வெளியேறி மற்றொரு ராசிக்குள் நுழைகின்றன. இது அனைத்து ராசிகளையும் சாதகமாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கிறது. இந்த கிரகங்களின் இயக்கம் மற்றும் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தேவர்களின் குருவான வியாழன் விரைவில் மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். 

பஞ்சாங்க கணக்கீடுகளின் படி, வியாழன் கிரகம் விரைவில் மேஷ ராசியில் மாற உள்ளார். இவர் தற்போது மீன ராசியில் அமர்ந்துள்ளார். குருவின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலிலும் மாற்றங்கள் காணப்படும், இருப்பினும், நான்கு ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். அவர்களது வாழ்க்கையில் வெற்றியும், பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும். குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

குரு பெயர்ச்சியின் சுப பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். இந்த ராசி மாற்றத்தால் பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் அடைவதோடு, பணித் துறையில் சாதகமான பலன்களையும் காண்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு காதலிலும் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். திருமண வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இக்காலகட்டத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் துணை செய்யும், தடைபட்ட பழைய வேலைகள் முடிவடையும், வருமானம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | Surya Gochar: பண நஷ்டத்தை தவிர்க்கவும்! பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை

சிம்மம் 

தேவகுரு வியாழன் சஞ்சாரம் செய்யும் சுப பலன் சிம்ம ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இருக்கும் மற்றும் பொருளாதாரத் துறையிலும் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் சுப பலன்கள் தெரியும். சிம்ம ராசிக்காரர்கள் முக்கிய பயணங்களை மேற்கொள்வீர்கள். அதில் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சமூகத்தில் மரியாதை கூடி திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலகட்டத்தில் பொருளாதாரப் பலன்கள் உண்டாகும், புதிய வேலையைத் தொடங்கி வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களும் வரும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துலாம்

குரு பெயர்ச்சியின் சுப பலன் துலாம் ராசிக்காரர்களுக்கும் இருக்கும். வியாபாரத்தில் வெற்றி மற்றும் வளர்ச்சி இரண்டும் இருக்கக்கூடும். இதனுடன் பொருளாதாரத் துறையில் முன்னேற்றப் பாதை திறக்கும். இக்காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: சில ராசிகளுக்கு இன்று மகிழ்ச்சியான செய்தி வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News