33 நாட்களில் குருவின் நிலையில் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Jupiter Retrograde in 33 Days: குரு வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும், மேலும் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை பெற்று அதில் முன்னேற்றம் அடைவார்கள். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2023, 08:47 AM IST
  • வியாழன் ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார்.
  • செப்டம்பர் மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
  • மேஷ ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும்.
33 நாட்களில் குருவின் நிலையில் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம் title=

33 நாட்களில் குரு வக்ர பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தில் குருவுக்கு தனி இடம் உண்டு. தேவகுரு வியாழன் சுப பலன்களை தரும் கிரகமாக கருதப்படுகிறது. அதேபோல் குருவின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குரு பகவான் விழாயன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் 13 மாதங்கள் எடுக்கும். வேத ஜோதிட நம்பிக்கைகளின்படி, வியாழனின் அம்சம் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது. குருவின் பார்வை அமிர்தம் போன்றது, ஏனெனில் அவர் பார்வையை வைக்கும் ராசிகளில் மீது சுப மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம்.

செப்டம்பரில் குரு வக்ர பெயர்ச்சி:
தேவகுரு பிருஹஸ்பதி தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த வருடமே தான் குரு தனது ராசியை மாற்றினார். இந்த சுப நிகழ்வு கடந்த ஏப்ரல் 22, 2023 தேதி அன்று, நடந்தது, வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி, அதன் நட்பு கிரகமான செவ்வாய் கிரகத்தின் அடையாளமான மேஷத்தில் பெயர்ச்சி அடைந்தார். மறுபுறம், தேவகுரு வியாழன் செப்டம்பர் 4 ஆம் தேதி, 2023 அன்று மாலை சுமார் 5 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார். பின்னர் டிசம்பர் 31, 2023 அன்று, குரு காலையில் நேர்கதியில் பயணிப்பார். எனவே செப்டம்பர் 4, 2023 இல் குரு வக்ர பெயர்ச்சி அடைய உள்ள நிலையில், ​​அதன் நல்ல பலன் சில ராசிகள் மீது காணலாம்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!

மேஷ ராசி: மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும். குரு வக்ர பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் நல்ல மாற்றங்களை உருவாக்கும். தேவகுரு வியாழன் உங்கள் ராசியின் லக்னத்தில் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தடைபட்ட உங்களின் பணிகள் விரைவில் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதன் போது, ​​உங்களுக்கு கணிசமான பண ஆதாயங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன, இதன் காரணமாக உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை தேடும் முயற்சிகள் நிறைவேறும். சமயப் பணிகளில் உங்கள் ஆர்வம் முன்பை விட அதிகமாக இருக்கும்.

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு, வியாழன் ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார், வியாழன் உங்கள் ஜாதகத்தில் வருமான வீட்டில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் ஆதிக்கம் பெறுவீர்கள். திடீரென்று நீங்கள் பண பலன்களைப் பெறலாம், இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வக்ர குரு திருமண வாழ்க்கைக்கு ஒரு வரமாக இருக்கும். இந்த நேரத்தில் புதிய சொத்து வாங்குவதற்கு சாதகமான நேரமாகும்.

கடக ராசி: செப்டம்பர் மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வக்ர குரு கடக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வியாழனின் இந்த மாற்றம் உங்கள் ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் நிகழும். இதன் காரணமாக உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், கடக ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான நல்ல அறிகுறிகள் தென்படும். தடைப்பட்ட பணம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு, அற்புதமான வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார் குரு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அஸ்தமனமாகும் சுக்கிரன்... பண நெருக்கடியை தவிர்க்க செய்ய வேண்டிய சில பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News