சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம். பண வரவு... அருள் மழை பொழிவார் அன்னை மகாலட்சுமி

Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் உண்டாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2024, 11:40 AM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் அதிக நன்மைகளை அளிக்கும்.
  • இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • தாய் தந்தை மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம். பண வரவு... அருள் மழை பொழிவார் அன்னை மகாலட்சுமி

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் பல அம்சங்களுக்கு காரணி கிரகங்களாக இருக்கின்றன. இந்த கிரக பெயர்ச்சிகள் மூலம் மனிதர்களின் அந்த குறிப்பிட்ட அம்சங்களில் தாக்கங்கள் ஏற்படுகின்றன. மகிழ்ச்சி, செழிப்பு, வளமை, வாகனம், பணம், வசதி, கலை, ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன், மார்ச் மாதத்தில் தனது இயக்கத்தை மாற்றப் போகிறார். 

Add Zee News as a Preferred Source

சுக்கிரன் தற்போது மகர ராசியி உள்ளார். மார்ச் 7, 2024 அன்று காலை 10:55 மணிக்கு, சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆவார். மார்ச் 30 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவருக்கு அன்னை மகாலட்சுமியின் (Goddess Mahalakshmi) அருள் பரிபூரண்மாக கிடைக்கும். அவர்களுகு எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படாது.

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். நினைத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அந்த அதிர்ச்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் மிகப்பெரிய நற்பலன்களை அடையவுள்ள ராசிகள் இவைதான்

ரிஷபம் (Taurus)

கும்ப ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும். இவர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் சுக்கிரன் அருளால் லாபம் அதிகரிக்கும். சுக்கிரனின் ராசி மாற்றம் உழைக்கும் மக்களுக்கு சாதகமாக அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வருமானம் கூடும். நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.

மேலும் படிக்க | கும்பத்தில் சூரியன் சனி: உச்சத்தில் இந்த ராசிகளின் வாழ்க்கை... பணம், மகிழ்ச்சி பன்மடங்காகும்

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் அதிக நன்மைகளை அளிக்கும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தாய் தந்தை மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் லாபம் உண்டாகும். இந்த காலத்தில் பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கும்பம் (Capricorn)

சுக்கிரனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இப்போது அதை தொடங்கலாம். இப்போதி நேரம் சாதகமாக உள்ளது. முதலீடு செய்ய நினைப்பவர்களும் இப்போது முதலீடு செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன் 2024: சித்திரை முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News