12 ஆண்டுக்குப் பின் குரு - சுக்கிரன் சேர்க்கை, இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை

குருவும் சுக்கிரனும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் ஒன்றாகப் பயணிக்க உள்ளனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் சுக்கிரனின் இந்த சுப அம்சம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேஷம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதுடன், பணம், சொத்துக்களைப் பெறுவதற்கான பாதையும் திறக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 29, 2024, 03:42 PM IST
  • சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கை மேஷ ராசியில் நடக்க உள்ளது.
  • சுக்கிரன்-குரு இணைவதால் பல நிதிப் பலன்களையும் பெறப் போகிறீர்கள்.
  • உங்கள் துணையுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.
12 ஆண்டுக்குப் பின் குரு - சுக்கிரன் சேர்க்கை, இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை title=

மேஷ ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடக்கப் போகிறது. உண்மையில், இரண்டு கிரகங்களும் மேஷ ராசியில் ஒன்றாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மேஷ ராசியில் சுக்கிரனும் வியாழனும் ஒன்றாக இருக்கப் போகிறார்கள். மேலும் ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டு கிரங்களும் மேஷத்தில் ஒன்றாக சேர்க்கை ஆகும். அதுவும் ஏப்ரல் 24 ஆம் தேதி, இந்த அபூர்வ சேர்க்கை நடக்கப் போகிறது. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை எந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கை மேஷ ராசியில் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கப் போகிறது. வெற்றி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அழகுபடுத்தும், அதே போல் உங்கள் சமூக கௌரவத்தை அதிகரிக்கும் மற்றும் நிதி நன்மைகளை கொண்டு வரும். இந்த காலம் வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வணிகம் முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழில் முயற்சிகள் சிறக்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் மற்றும் முக்கியமான பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பும் கூட எதிர்பார்க்கலாம். மேஷ ராசியில் சுக்கிரன்-குரு இணைவதால் பல நிதிப் பலன்களையும் பெறப் போகிறீர்கள்.

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராகு சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளால் பொற்காலம்

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு, பதினொன்றாம் வீட்டில் சுக்கிரனும் வியாழனும் இணைவதால், முன்பை விட இப்போது சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலையும் முன்பை விட வலுவாக இருக்கும். நிதி ஸ்திரத்தன்மை ஏற்கனவே உங்களுக்கு சாதகமாக உள்ளது, மேலும் தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேறும், உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். இது தவிர மேஷ ராசியில் சுக்கிரன்-குரு இணைவதால் உங்கள் காதல் வாழ்க்கையும் முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.

கடகம் (Cancer Zodiac Sign): சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான பாதையைத் திறக்கும். இந்தக் காலகட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பல வெற்றிகளைப் பெறுவீர்கள். பல்வேறு துறைகளில் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் சமூக கௌரவம் அதிகரிப்பதையும் காண்பீர்கள். உங்கள் சமூகத்தில் வித்தியாசமான தோற்றம் காணப்படும். மேலும், உங்கள் பணியிடத்தில் உள்ளவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில நல்ல செய்திகளையும் பெறலாம். 

துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை ஏழாவது வீட்டில் இருக்கப் போகிறது. குரு சுக்கிரனின் நேரடி பார்வை கல்வி, தொழில், பணம், வணிகம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு இனிமையானதாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை தேடிக்கொண்டிருந்தால், இந்தக் காலத்தில் புதிய வேலை கிடைக்கும். இந்த காலம் வேலை மற்றும் வணிக விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | 500 ஆண்டுக்குப் பின் உருவாகும் கேதார ராஜயோகம், இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News