ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை என்பது பெரியோர்கள் வாக்கு. ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஆஷாட மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசி, தேவசயானி ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இம்முறை ஜூலை 17ம் தேதி காலை 7:05 மணிக்கு தொடங்கி ஜூலை 18ஆம் தேதி காலை 6:13 மணி வரை தொடரும். சயனம் என்றால் உறக்கம். தேவர்களும் மகாவிஷ்ணுவும் உறங்கச் செல்லும் நாள் தேவசயனி ஏகாதசி நாளாகும்.
தேவசயனி ஏகாதசிக்குப் பின்வரும் பௌர்ணமியிலிருந்து நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கப்படும். அதாவது ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம். இந்தக் காலம் மிகவும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது. இந்த காலத்தில் முடிந்தவர்கள், கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவார்கள். ஜூலை 17ம் தேதி முதல் சதுர்மாஸ்யம் தொடங்கி நவம்பர் 12 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன்று நாள்கள் கொண்டது விரதம். ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமி திதி அன்று, இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி மகாவிஷ்ணுவை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது சிறப்பு.
ஏகாதசி அன்று முழு உபவாசம் இருப்பது நல்லது என்றாலும், இயலாதவர்கள் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால், அரிசி உணவை தவிர்த்து, மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். ஏகாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற்கான துளசியை தசமி அன்றே பறித்துவைத்துக்கொள்ளவது நல்லது.
மறுநாள் துவாதசி காலையில் விரதத்தை முடிக்க வேண்டும. துவாதசியன்று காலையில் பகவான் மகாவிஷ்ணுவை பூஜித்து, ஏழைகளுக்கு அன்னதானம் அளித்த பிறகு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் சேர்த்து சமைத்த உணவு அருந்தி விரத்தத்தை முடிக்க வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவது சிறப்பு.
தேவசயனி ஏகாதசி வழிபாட்டு முறை:
1. அதிகாலையில் எழுந்து குளித்து, தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வணங்கி, மகாவிஷ்ணுவிற்கான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தல்.
2. வீட்டிற்கு அருலில் உள்ள விஷ்ணு பகவான் கோவிலுக்கு சென்று வணங்கி, முடிந்தால், அபிஷேகம் செய்தல்
3. மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி இலைகளை கொண்டு பூஜிப்பது சிறப்பு.
ஏகாதசி விரத நாளில் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்...
மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கும் ஏகாதசி நாளில், தவித்த வாய்க்கு தண்ணீரும், பசித்த வயிறுக்கு உணவும் கொடுத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மேலும், நல்லொழுக்கங்களை கடைபிடிப்பது இறவனின் அருளைப் பெற்றுத் தரும்.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனம் தூய்மை ஆடைகிறது, மனதில் தோன்றும் வெறுப்பு, அச்சம், கோபம், குழப்பம் போன்ற தீய எண்ணங்கள் விலகி மனம் தூய்மை அடைகிறது. நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் ஏற்றத்தை காணலாம். மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பதன் மூலம், மனதிற்கு இனிய வாழ்க்கையும் அமையும் என்பது ஐதீகம்.
விரதத்தின் போது பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து கடவுள் சிந்தனையுடன் இருப்பது சிறப்பு. மகா விஷ்ணு குறித்த ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதும், பெருமாளின் பாடல்கள் இசைப்பதும், கேட்பதும் மனதிற்கு பெரும் நிம்மதியைத் தரும்.
ஏகாதசி விரதம் இருக்கும் நாளில், விருந்து அல்லது கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும், விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதோடு, உடலில் சேரும் நச்சுக்களும் நீங்குகின்றது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ