மஹா அஷ்டமியில் உருவாகும் அபூர்வ யோகம்! இனி ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

மஹா அஷ்டமியின் அதிர்ஷ்ட ராசி: சைத்ரா நவராத்திரியின் அஷ்டமி திதி மார்ச் 29 அன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் உருவாகும் அபூர்வ யோகத்தினால் சிலரின் வாழ்க்கையில் பொன்னான நாட்கள் தொடங்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2023, 02:30 PM IST
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதை இருக்கும்.
  • நீண்ட காலமாக நிறைவேறாமல் தடைபட்ட பணிகள் நிறைவடையும்.
  • வேலை செய்பவர்கள் முக்கிய பொறுப்புகளையும் பதவியையும் பெறலாம்.
மஹா அஷ்டமியில் உருவாகும் அபூர்வ யோகம்! இனி ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சுப சேர்க்கை அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த முறை துர்கா அஷ்டமி அல்லது மஹா அஷ்டமி அன்று அபூர்வ கிரக சேர்க்கை நடைபெறுகிறது. ஜோதிடத்தின்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சைத்ரா நவராத்திரியில், சனி தனது ராசியான கும்பத்தில் நுழைந்தார். அதே நேரத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது ராசியான மீனத்தில் அமர்ந்துள்ளார். இது மட்டுமல்லாமல் வேறு சில கிரகங்களின் நிலையும் இந்த விசேஷ நேரத்தில் சிறப்பாக இருக்கும், இதன் காரணமாக மஹாஷ்டமி நாளில் கேதாரம், ஹன்ஸ, மாளவ்யம் மற்றும் மஹாபாக்யம் போன்ற ராஜயோகங்களின் பிரமாண்ட கலவை உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த மிக முக்கிய அபூர்வமான தற்செயல் நிகழ்வு சிலருக்கு மிகவும் சாதகமானதாக நிரூபிக்கப் போகிறது. இந்த முறை சைத்ர மஹாஷ்டமி மார்ச் 29 அன்று வரும் நிலையில், அபரிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுன ராசி

இம்முறை சைத்ரா அஷ்டமியில் பல ராஜயோகங்கள் உருவாகும் நிலையில், மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மங்களகரமான பலன் தரும். வேலையில், தொழிலில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன்கள் கை கூடி வரும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மிதுன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். 

கடக ராசி

ஜோதிட சாஸ்திரப்படி, கடக ராசிக்காரர்களுக்கும் இந்த ராஜயோகம் வேலையில், தொழிலில் சிறப்பான பலன்களைத் தரும். சம்பள உயர்வு பதவி உயர்வு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். பொருளாதார நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும். நீங்கள் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இது நல்ல நேரம்.

கன்னி ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெரும் சேர்க்கை பெரும் பலன்களைத் தரும். உங்கள் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இந்த காலகட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் ஒரு பயணத்தை மேற்கொள்வார்கள், இந்த நேரத்தில் பயணத்தில் சுப பலன்கள் கிடைக்கும். அதிக லாபம் ஈட்டுவதில் ஆதாயம் உண்டாகும். இந்த நேரம் முதலீட்டிற்கு ஏற்றது. மாணவர்கள் பெரும் வெற்றி பெறுவார்கள்.

மேலும் படிக்க | உங்கள் ராசிக்கு ஏற்ற ரத்தினம் எது ! 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட கல் விபரம் இதோ..!

மீன ராசி

ஜோதிட சாஸ்திரப்படி இந்த யோகம் மீன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதை இருக்கும். வேலை செய்பவர்கள் முக்கிய பொறுப்புகளையும் பதவியையும் பெறலாம். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக நிறைவேறாமல் தடைபட்ட பணிகள் நிறைவடையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ராகு - கேது பெயர்ச்சியினால் இன்னல்களை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News