சனி உதயமாகி இந்த ராசிகளின் செல்வம் பெருகும், விதி மாறும்

Shani Uday in March 2023: 2023ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி முதல் அஸ்தமித்த சனி பகவான் உதயமானவுடன் 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குவார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 27, 2023, 02:06 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
  • துலா ராசிக்காரர்களுக்கு ​பணியிடத்தில் மரியாதை கிடைக்கும்.
  • முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம்.
சனி உதயமாகி இந்த ராசிகளின் செல்வம் பெருகும், விதி மாறும் title=

சனி உதயம் 2023: கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக இருப்பவர் சனி பகவான். னி பகவான் தற்போது கும்ப ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். அவர் ஜனவரி 31 ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் இருக்கிறார். மார்ச் 6, 2023 திங்கட்கிழமை அன்று அவர் உதயமாவார். சனி பகவான் உதயமானவுடன் 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குவார். சனி உதயம் ராசி இல்லாதவர்களுக்கு பெரும் சாதகமான பலனை அளிக்கப் போகிறது. இந்த நபர்கள் வேலை, வணிகம், பணம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் ஒரு பெரிய பரிசைப் பெறலாம்.

சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், 4 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலங்கள் ஏற்படும். 

ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழில் தொடர்பான பல வாய்ப்புகள் உருவாகும். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். வேலையில் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.

மேலும் படிக்க | சனியின் நட்சத்திர மாற்றத்தால் விதியும் மாறும்! ஜாக்கிரதை முன்னெச்சரிக்கை

சிம்ம ராசி: உத்தியோகத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரியும் சொந்தக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். உங்கள் தடைபட்ட வேலை நிறைவேறும்.

துலாம் ராசி: துலா ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். துலாம் ராசியினருக்கு ஹோலி பண்டிகை பல நன்மைகளை தரப்போகிறது. தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையில் சேரலாம்.

கும்ப ராசி: ஹோலி அன்று சனிபகவான் கும்ப ராசியில் உதிக்கிறார், இது இந்த ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரப்போகிறது. முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம். திட்டங்கள் வெற்றியடையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகுவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு இனி ராஜயோகம், செல்வம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News