Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும் மாற்றுகின்றன. இவை கிரகப் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஜோதிட கணக்கீடுகளின் படி செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். வீடு, வீரம் , தைரியம், செல்வம் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கிரகம் உள்ளது. பூமியின் மைந்தனான செவ்வாய் கிரகத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் இந்த அம்சங்கள் தொடர்பான மாற்றங்களும் மனித வாழ்க்கையில் ஏற்படும்.
ஜூலை மாதத்தில் செவ்வாய் தனது ராசியை மாற்ற உள்ளார். ஜூலை 12 ஆம் தேதி அவர் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணியிடத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
கன்னி (Virgo)
செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். செவ்வாயின் அருளால் இந்த காலத்தில் பல வித ஆதாயங்களை அடைவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் உங்கள் தலைமைத்துவ பண்பில் அதிகப்படியான முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
மேலும் படிக்க | சுக்கிர புத ஆதித்ய யோகத்தால் லட்சுமி நாராயணரின் அருள் பெறும் அதிர்ஷ்ட ராசிகள்!
மேஷம் (Aries)
செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாகவும் சுகமாகவும் இருக்கும். செவ்வாய் மேஷ ராசியின் அதிபதியாக உள்ளார். செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் புரிதலும் அதிகமாகும். ஆய்வுப் பணிகளில் உள்ளவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபமும் முன்னேற்றமும் கிடைக்கும். புதிய வர்த்தகத்தை தொடங்க வாய்ப்பு உள்ளது. முதலீடுகளால் லாபம் பெருகும்.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலையும் மேம்படும். பணியிடத்தில் உங்கள் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இந்த காலத்தில் வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், நில குத்தகை, தரகர் வேலை செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ