பிள்ளையாருக்கு பிடித்த ராசிகள்: இவர்களுக்கு அறிவு, செல்வம், மகிழ்ச்சி அனைத்தையும் அள்ளித்தருகிறார்

Favourite Zodiac Signs of Lord Ganesh: சில ராசிக்காரர்கள் பிள்ளையாருக்கு பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். இவர்களை கண்ணை இமை காப்பது போல அவர் காக்கிறார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 29, 2024, 09:12 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.
  • இவர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
  • விநாயகப் பெருமானின் அருளால், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள்.
பிள்ளையாருக்கு பிடித்த ராசிகள்: இவர்களுக்கு அறிவு, செல்வம், மகிழ்ச்சி அனைத்தையும் அள்ளித்தருகிறார் title=

Favourite Zodiac Signs of Lord Ganesh: ஆனைமுகன், கணபதி, கஜானனன், விக்னேஸ்வரன், பிள்ளையார் என பல பெயர்களில் வணங்கப்படும் விநாயகர் முழுமுதற் கடவுளாக இருக்கிறார். இந்து சமயத்தின் படி, எந்த வித வேலையாக இருந்தாலும், அதை துவக்குவதற்கு முன்னர் விநாயகரை வணங்குவது வழக்கம். விக்னங்கள், அதாவது அனைத்து வித தடைகளையும் போக்கி, அவர் அனைத்து வேலைகளிலும் வெற்றி தரும் விக்னஹர்தாவாக இருக்கிறார். 

கணங்களின் அதிபதியாக அவர் இருப்பதால், அவருக்கு கணபதி என்ற பெயர் வந்தது. தனது வாகனமாக அவர் மூஞ்சூரை கொண்டுள்ளார். நாம் நமது அன்னை, தந்தையை கடவுளாக வணங்க வேமண்டும் என விநாயகர் உலக மக்களுக்கு உணர்த்தினார். உலகத்தின் அம்மை அப்பனான சிவன் பார்வதியின் பிள்ளை அவர். ஆகையால் மரியாதையுடன் அவர் பிள்ளையார் என அழைக்கப்பட்டார். விநாயகர் தன் பக்தர்களுக்கு அருள் பொழிவதில் குறை காட்டுவதில்லை. அவருக்கு பெரிய பெரிய கோயில்கள்கூட தேவையில்லை. ஆற்றங்கரை, குளக்கரை, அரச மரம் என எங்கு வேண்டுமானாலும் அவரை பிரதிஷ்டை செய்து வணங்கலாம். 

கிரக தோஷங்களை நீக்கி அருள் பொழிவதில் விநாயகருக்கு நிகர் யாரும் இல்லை. குறிப்பாக சனி பகவான் விநாயகரின் பக்தர்களை அதிகம் படுத்துவதில்லை. விநாயகர் அனைத்து மக்களையும் பாரபட்சமில்லாமல் காத்து ரட்சித்தாலும், சில ராசிக்காரர்கள் பிள்ளையாருக்கு பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். இவர்களை கண்ணை இமை காப்பது போல அவர் காக்கிறார். கிரகங்களின் தாக்கங்களிலிருந்து அவர் இந்த ராசிக்காரர்களை காத்து ரட்சிக்கிறார். இவர்கள் வாழ்வில் அதிக நாட்களுக்கு எந்த துன்பமும் நீடித்து இருப்பதில்லை. பிள்ளையாருக்கு பிடித்தமான அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். விநாயகப் பெருமானின் அருளால், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் விநாயகருக்கு செல்லப்பிள்ளைகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் வாழ்வில் தோல்வி ஏற்படுவது மிகக்குறைவு. அப்படி ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வரும் திறனை பிள்ளையார் இவர்களுக்கு அளிக்கிறார். ஐங்கரனின் அருளால் இவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை இருக்கும். 

மேலும் படிக்க | 5 ராசிகள் மீது ராகு, கேதுவின் அருள் மழை: இவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பம்

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்கள் கூர்மையான புத்தியும், மனமும் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் கல்வித் துறையில் வெற்றி பெறுவார்கள்.படிப்பிலும் எழுத்திலும் அதி வேகத்துடனும் கூர்மையுடனும் இருக்கும் இவர்களுக்கு விநாயகர் அதிக அளவு புத்திக்கூர்மையை அளிக்கிறார். இவர்கள் கடுமையான போட்டியாளர்கள். இவர்களை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கனிவான இயல்புடையவர்கள். இவர்கள் விரைவில் சோர்ந்து போக மாட்டார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பதால் இவர்களுக்கு விநாயகர் கூடுதல் அருளை பொழிகிறார்.

மகரம் (Capricorn)

இலக்கை நோக்கி அயராமல் உழைக்கும் மகர ராசிக்காரர்க்ள் மீது விநாயகப் பெருமானின் விசேஷ அருள் எப்போதும் இருக்கிறது. நவக்கிரகங்களின் தோஷங்களிலிருந்து பிள்ளையார் மகர ராசிக்காரர்களை காக்கிறார். குறிப்பாக சனி பகவான் பாதிப்புகளை ஏற்படுத்தும் சனி பெயர்ச்சி (Sai Peyarchi) மற்றும் ஏழரை சனி (Ezharai Sani) காலங்களில் மகர ராசிக்காரர்கள் விநாயகர் அகவல் பாராயணம் செய்தால், வந்த தொல்லைகள் அனைத்தும் பனி போல விலகிடும். இவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருப்பதால், தும்பிக்கை கடவுள் பிள்ளையாருக்கு இவர்களை அதிகம் பிடிக்கும். இவர்களின் மனம் மிக வேகமாக இயங்குகிறது. பெரும்பாலும் மகர ராசிக்காரர்கள் கல்வித் துறையில் நல்ல வெற்றி காண்கிறார்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம், பண மழை கொட்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News