Favourite Zodiac Signs of Lord Shiva: சிவபெருமான் இந்து சமயத்தின் மிக முக்கியமான கடவுள். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் அவர். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் பிறப்புன் இறப்பும் இல்லாதவர். கயிலாயத்தில் வாசம் புரியும் சிவ பெருமான், அண்ட சராசரங்களையும் காத்து ரஷிக்கிறார். தன்னுடைய ஒரு பாதியை தன் மனைவியான சக்திக்கு கொடுத்து ஆண் பெண் சமத்துவத்தை உலகுக்கு உணர்த்திய உன்னதர் சிவன்.
சிவ பெருமான் உலகம் முழுதும் பல வடிவங்களில், பல பெயர்களை கொண்டு வியாபித்து இருக்கிறார். எனினும், தமிழகத்துக்கும் சிவனுக்கும் ஒரு தனி பிணைப்பு உண்டு. சிவனை பாடி, அவருக்காக பல பாசுரங்களை எழுதிய நாயன்மார்கள் அனைவரும் தமிழகத்தில் அவதரித்தவர்களே. ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என தமிழ்நாட்டை நம் முன்னோர்கள் சிவனுக்கே அர்ப்பணித்தார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜனாக சிதம்பரத்தில் காட்சியளிக்கும் சிவன், அனைத்தையும் ஆட்கொள்ளும் ஜோதி தானே என்பதற்கு திருவண்ணாமலையில் சாட்சியாய் இருக்கிறார்.
சிவபெருமானை வழிபட நாள், கிழமை எதுவும் தேவை இல்லை. நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் அவரை மனதார வணங்கினால், ஓடோடி வந்து அருள் புரிவார் அவர். எனினும், மகா சிவராத்திரி நாளன்று அவரை வணங்குபவர்களுக்கு கேட்ட அனைத்தும் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மகா சிவராத்திரி (Maha Shivratri) கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து, சிவ ஸ்தோத்திரங்களை சொல்லி, கன் விழித்து அந்த முக்கண்ணனை வழிபடுகிறார்கள்.
சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகள்
சிவனுக்கு (Lord Shiva) அனைவரும் சமமே. அவர் அனைத்து மனிதர்களுக்கும் சமமாக அருள் பாலிக்கிறார். எனினும், சில ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன. இந்த ராசிக்காரர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது வேண்டுதல்களை சிவன் நிறைவேற்றுகிறார். இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், சிவ பெருமானுக்கு பிடித்தமான அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்கள் உழைப்பாளிகளாக கருதப்படுகிறார்கள். மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். இமயமலையில் வாசம் செய்யும் சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று. இவர்கள் வாழ்வில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் சிவன் தீர்த்து வைக்கிறார். மகா சிவராத்திரி அன்று சிவாஷ்டகம் பாராயணம் செய்வது மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்தான் கிரக அதிபதி. விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு சிவபெருமானின் விசேஷ அருள் இருக்கின்றது. குறிப்பாக பணியிடத்திலும் வியாபாரத்திலும் ஏற்படும் சங்கடங்களை சிவன் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். மகாசிவராத்திரி அன்று சிவபுராணம் படிப்பது விருச்சிக ராசிக்காரர்களை மேன்மை அடையச் செய்யும்.
மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள்
மகரம் (Capricorn)
மகர ராசியின் அதிபதி சனி பகவான். சனிபகவான் சிவனின் மிகப்பெரிய பக்தர். ஆகையால் மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் இருப்பதுடன் அவர் வணங்கும் சிவபெருமானின் அருளும் எப்போதும் இருக்கும். ஏழரை சனி (Ezharai Sani) காலத்திலும் மகர ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும். மகா சிவராத்திரி அன்று மகர ராசிக்காரர்கள் லிங்காஷ்டகம் பாராயணம் செய்வது நல்லது.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்கும் சனி பகவான்தான் அதிபதி. மகர ராசிக்காரர்கள் மீது இருப்பது போல கும்ப ராசிக்காரர்கள் மீதும் சிவபெருமானுக்கு அதிகப்படியான பற்று உள்ளது. சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிவனால் தீர்வு கிடைக்கும். சிவபெருமான் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அளிக்கிறார். மகா சிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள் ‘ஓம்நமசிவாய’ என்ற பஞ்சாஷர மந்திரத்தை இரவு முழுவதும் பாராயணம் செய்தால் வாழ்வில் அதிகப்படியான நன்மைகளை பெறலாம்..
மேலே குறிப்பிட்டுள்ள ராசிகள் மட்டுமல்லாமல், அனைத்து ராசிகளையும் சிவன் தன் அருள் பார்வையில்தான் வைத்துள்ளார். மனிதர்களாகிய நம்மால்தான் அதை உணர முடிவதில்லை. அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி. சிவ பக்தி என்னும் குடையின் கீழ் ஒருங்கிணைந்து இந்த மகா சிவராத்திரியில் சிவனருள் பெறுவோம்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ