Pongal Festival 2023: பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்று. போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதாவது, மார்கழியின் கடைசி நாளும், பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளுமான போகி பண்டிகை அன்று பழைய பொருள்களை விடுத்து புதியவற்றை வீடுகளில் வாங்குவார்கள்.
தொடர்ந்து, இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மாட்டு பொங்கல் உழவுக்கு உதவுக்கு மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று சுற்றுலா செல்வது என பூமியை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில், இயற்கையை போற்றும் விதமாக கொண்டாடப்பட்டாலும் மனிதனும் இயற்கையின் ஓர் அங்கம்தான். எனவே, தைப் பொங்கல் அன்று ஏழை, எளியோருக்கு தானம் வழங்குவதும் உங்களுக்கு நன்மையையே விளைவிக்கும். இதனை முன்னிட்டு உங்கள் ராசிக்கு ஏற்றபடி எதை தானம் செய்யலாம் என்பது குறித்து இதில் காணலாம்.
மேஷம்: எள் உடன் வெல்லம், வேர்க்கடலை, வெல்லம்.
ரிஷபம்: வெள்ளை துணி, இனிப்பான எள் விதை, தயிர், அரிசி.
மிதுனம்: பச்சை மற்றும் வெள்ளை நிற போர்வைகள், பருப்பு, அரிசி,
கடகம்: வெள்ளை எள் அல்லது கற்பூரம்
சிம்மம்: இனிப்பான கோதுமை எள் இனிப்பு, தாமிரம்
கன்னி: பச்சை நிற போர்வைகள்
மேலும் படிக்க | Tamil Pongal Song: பொங்கலுக்கு மறக்கவே முடியாத தமிழ் பாடல்கள்...
துலாம்: பாயாசம், கற்பூரம், சர்க்கரை, வெள்ளை துணி
விருச்சிகம்: சிவப்பு துணி, எள்
தனுசு: மஞ்சள் துணி
மகரம்: கருப்பு போர்வைகள், கருப்பு எள், தேநீர்
கும்பம்: ராஜ்மா, எள்
மீனம்: பட்டு துணி, கொண்டைக்கடலை, பருப்பு, எள்
மேலும் படிக்க | பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன்? தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ