சனி வக்ர பெயர்ச்சி பலன் 2022: அக்டோபருக்குள் இந்த 4 ராசிகளுக்கு செல்வம் பெருகும்

Shani Vakri 2022: ஜூலை 12-ம் தேதி மகர ராசியில் சனி இருப்பது இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 29, 2022, 09:12 AM IST
  • மூன்று ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள்
  • சனி வக்ர பெயர்ச்சி பலன் 2022
சனி வக்ர பெயர்ச்சி பலன் 2022: அக்டோபருக்குள் இந்த 4 ராசிகளுக்கு செல்வம் பெருகும் title=

சனி வக்ரி பலன் 2022: சனி பகவானின் ராசி மாற்றம் சுமார் இரண்டரை ஆண்டுகளில் ஒருமுறை தான் நிகழும். சனி பகவான் ஒரு ராசியை கடக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த நேரத்தில் சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்தில் அமர்ந்து வக்ர நிலையில் இருக்கிறார். அதன்படி சனி பகவான் ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் நுழைந்தார். முன்னதாக ஜூன் 5 ஆம் தேதி சனி வக்ர நிலையில் இங்கே வந்தது. அந்தவகையில் தற்போது அக்டோபர் மாதம் வரை சனி பகவான் மகர ராசியில் தான் இருப்பார். மகர ராசியில் சனி வருவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாக்கித் தரும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர பெயர்ச்சி சுப பலன்கள் உண்டாக்கித் தரும்.

ரிஷபம்- சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், வருமானத்தை அதிகரிக்கவும் சனி பகவான் செய்வார். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமான பலன்களை உண்டாக்கித் தரும். சனி பகவானின் அருளால் தடைபட்ட வேலைகள் நிறைவேறும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும், இதனாக நீங்கள் நன்றாக இருப்பது போல் உணர்வீர்கள்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்குப் பிற்போக்கான சனி பகவான் சுப பலன்களை மட்டுமே உண்டாக்கித் தருவார். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலை மேம்படும், இதனால் நிதி சிக்கல்கள் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். முதலீடு செய்வது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன்களை கொண்டு தரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு பிற்போக்கான சனி அதீத பலன்களை அள்ளித் தருவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் கூட்டுப் பணியில் லாபம் அடைவார்கள். கௌரவம் உயரும். நீண்ட தூர பணத்தால் நன்மை உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News