Lord Shani: ஏழரை சனியின் கிரஹ பெயர்ச்சியும் அதன் துல்லியமான பலன்களும்

சனியின் தாக்கத்தை நுணுக்கமாக கணிக்கும் வழிமுறைகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2022, 09:37 PM IST
Lord Shani: ஏழரை சனியின் கிரஹ பெயர்ச்சியும் அதன் துல்லியமான பலன்களும் title=

எந்த ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் வேதனையைக் கொடுப்பதாக இருக்கும் என்று பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் ஏழரை சனி எனும் சனி பகவானின் முக்கியமான தாக்கம் ஏற்படுத்தும் வார்த்தையின் பொருளும், அதன் மிக முக்கிய அம்சங்கள் உங்களுக்குத் தெரியுமா?

சனி பகவான் கோச்சாரத்தில் ஜன்ம ராசிக்கு முந்தைய ராசியில் பயணிக்கும் இரண்டரை ஆண்டு, ஜன்ம ராசியில் பயணிக்கும் இரண்டரை ஆண்டு, ஜன்ம ராசிக்கு அடுத்த ராசியில் பயணிக்கும் இரண்டரை ஆண்டு என மொத்தம் மூன்று காலங்களையும் சேர்த்து ஏழரை சனி காலம் என அனுசரிக்கின்றோம்

ஆனால் ஏழரை சனி என்ற காலத்தில் சனியின் தாக்கத்தை நுணுக்கமாக கணிக்கலாம். ஜனன ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த பாகைக்கு முன்னும் பின்பும் 45 டிகிரி என்று கணக்கிடலாம்.  

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள் 

சனி ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் இருக்கும் பாவக காரகத்துவம் ஆதிபத்தியத்தின் தன்மையினை பிரதானமாகக் கொண்டு, இயல்பான காரகத்துவத்தின் அடிப்படையில் தசா புத்தி காலத்துக்கான கொடுப்பினைகளுக்கு உட்பட்டு மட்டுமே பலன்களை வழங்குவார் என்பது உண்மையான விஷயம்.

ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் வீடு, எட்டாம் வீடு இவற்றின் அதிபதிகள் எப்படி பலம் அல்லது பலவீனம் பெற்று இருப்பதைப் போல 64 வது நவாம்சம் அதன் அதிபதியையும் கணிக்க வேண்டும்.

அதன் அதிபதி இந்த கிரஹங்கள் சனி பகவானின் ஜன்ம ஜாதகத்தில்  எப்படித் தொடர்பு கொண்டிருக்கின்றார்களோ அதன் அடிப்படையில் ஏழரை சனி காலத்தில் ஜாதகரின் உடல்  நிலை, மன நிலை மாற்றம் பாதிப்புக்கு உள்ளாகின்றது என்பதை நுணுக்கமாக கவனிக்கலாம். 

மேலும் படிக்க | ஏழரை சனியின் வகைகளும் அவற்றின் பாதிப்பிற்கு பரிகாரங்களும்

ஏழரை சனி காலத்தில் பெரும்பாலும் உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, உலகத்தைப் புரியவைப்பார். சனி துலாமில் உச்சமடையும் காலத்தில், சனி அந்த ஜாதகருக்கு தனது இயல்பான காரகத்துவத்தின் சுப மற்றும் அசுப பலன்களை கலந்து வழங்குவார்

கோச்சார காலத்தில் குருவின் பார்வை விழுந்தால் அது சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவில் குறைக்கும்.  கோச்சார காலத்தில், 90 டிகிரியானது லக்னத்திலிருந்து 3 அல்லது 6 அல்லது 11 என்ற வீடுகளில் அமைந்தால் சனி பகவான் நன்மைகளை வழங்குவார்

அதேபொல, ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருந்தால், பிரச்சனைகளால் வேதனையை அனுபவிக்கும் நிலைமை ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News