தினபலன் அக்டோபர் 22, 2023: இன்று சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்..!

தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? அக்டோபர் 22, 2023க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 22, 2023, 05:28 AM IST
  • உறவினர்களின் வருகை உண்டாகும்.
  • மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.
  • பணி சார்ந்த இழுபறியான சில வேலைகள் முடியும்.
 தினபலன் அக்டோபர் 22, 2023: இன்று சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்..! title=

இன்றைய ராசிபலன்: அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். 

ரிஷபம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். 

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு பொற்காலம்: லட்சுமி அன்னையின் அருள் கிடைக்கும்

மிதுனம்
.நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும் பணி சார்ந்த இழுபறியான சில வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். 

கடகம்
உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும். 

சிம்மம்
எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த வருத்தங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

கன்னி
வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். 

துலாம்
பழைய கடன் சார்ந்த முயற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.நினைத்த சில பணிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். 

விருச்சிகம்
மனதில் எண்ணிய காரியங்கள்  நிறைவேறும். திடீர் சந்திப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும்

தனுசு
உறவுகளின் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கைகொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும்.  சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். 

மகரம்
எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைபட்ட சில  வேலைகள் முடியும்.  

கும்பம்
உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்களை எதிர்பார்த்திருக்காமல் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் கனிவு வேண்டும். சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள்.  உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

மீனம்
வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும்.

மேலும் படிக்க | 2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News