குருவின் உதயத்தால் பணம் வந்து குவியப்போகும் ராசிகள்! வாழ்க்கைத்தரம் உயரும்

Jupiter Rise In Aries: இன்னும் சில நாட்களில் அதாவது ஏப்ரல் 27ம் தேதியன்று மேஷ ராசியில் குரு உதயமாகிறார். நேற்று குரு பெயர்ச்சி ஆன நிலையில், குருவின் இந்த உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு செல்வம்  கொழிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 23, 2023, 05:34 PM IST
  • ஏப்ரல் 27ம் தேதியன்று மேஷ ராசியில் குரு உதயமாகிறார்
  • குரு பெயர்ச்சிக்கு பின் வரும் முதல் உதயம்
  • குருவின் உதயத்தால் செல்வம் கொழிக்கும் ராசிகள்
குருவின் உதயத்தால் பணம் வந்து குவியப்போகும் ராசிகள்! வாழ்க்கைத்தரம் உயரும் title=

Guru Uday Effect: ஜோதிடத்தின் முக்கிய கிரகமான வியாழன், ஏப்ரல் 27, 2023 அன்று 02:07 மணிக்கு மேஷ ராசியில் உதயமாகிறார்.  சுப கிரகம் மர்றும் ஞான காரகரான குரு பகவான், இயல்பிலேயே ஆண்பால் தன்மை கொண்டவர். வியாழன் அதன் சொந்த ராசிகளான தனுசு மற்றும் மீனத்தில் அமைந்திருந்தால், அது மிகவும் திறமையான விளைவுகளை உருவாக்கும்.

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் வியாழன் நட்பு ராசியில் இருப்பதால், செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷத்தில் குரு பகவானின் எழுச்சி பொதுவாக சாதகமானது. 

ஆனால், மேஷத்தில் வியாழன் கிரகம் உதயமாவது ஏற்படக்கூடிய பொருளாதார மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப மாறுபடும். 

குருவின் உதயத்தால், பொருளாதார ரீதியாக சில ராசிகளுக்கு செழிப்பான நிலை ஏற்படும். அந்த ராசிகள் இவை...

மேலும் படிக்க | அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி

மேஷம்
குரு உதயத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அருமையான பலன்கள் நடைபெறும். பணத்தைச் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், இந்த காலகட்டத்தில் பணம் உங்களிடம் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியான வியாழன் முதல் வீட்டில் அமர்வதால் ஆதாயம் மற்றும் செலவுகள் என்ற வகையில் கலவையான பலன்களைத் தரக்கூடும்.

ஆனால் வியாழனின் அம்சம் நன்றாக இருப்பவர்களுக்கும், மேஷ ராசிக்காரர்கள், சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் அதிக வாய்ப்புகளை கொடுப்பார் சுப கிரகமான குரு பகவான்

ரிஷபம்
குருவின் உதயத்தால் அதிக அளவு பணம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அதன் மூலம் பலன் பெறுபவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்று கூறலாம். இந்த காலகட்டத்தில் அதிக பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.குடும்ப சொத்துகள் வருவதற்கும், அநாமதேய வழிகளில் பணம் வந்து சேர்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க | மனதில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் புதன் அஸ்தமானம்! ராசியான 3 ராசிகள்

தனுசு
நிதி ரீதியாக, மேஷத்தில் வியாழன் உதயமாவது தனுசு ராசிக்குக் மிகவும் லாபகரமாக இருக்கலாம், இதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.  சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பெயரையும் சம்பாதிக்கலாம்.

பணம் மற்றும் காசை விட நல்ல பெயர் மிகப் பெரிய சொத்தல்லவா? முதலீடுகளில் இருந்தும் நல்ல வருவாயை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

மீனம்
நிதி ரீதியாக, குருவின் உதயம், மிகவும் நல்லதாக இருக்கும். வாழ்க்கைத் தரத்தை சிறப்பாகவும் மேம்பட்டதாகவும் மாற்றுவதற்கான காலகட்டம் இது. அதிக வருமானம் ஈட்டவும், சேமிக்கவும் மற்றும் பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்யவும் குருவின் உதயம் வழிகோலும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிகளின் தலைவிதி மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News